ஆதித்ய வர்மா நஷ்டத்தை தவிர்க்க விக்ரம் செய்த அதிரடி நடவடிக்கை

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ’ஆதித்ய வர்மா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற போதிலும் அதிகப்படியான பட்ஜெட் காரணமாக இந்த படம் சுமார்…

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ’ஆதித்ய வர்மா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற போதிலும் அதிகப்படியான பட்ஜெட் காரணமாக இந்த படம் சுமார் 7 கோடி ரூபாய் நஷ்டத்தை தந்ததாக கூறப்படுகிறது

இந்த படத்தின் நஷ்டத்திற்கான முதல் காரணமாக இந்த படத்தை இரண்டு முறை எடுத்ததே என்று கூறப்படுகிறது. முதல் முறையாக பாலா இயக்கிய ’வர்மா’ படத்தின் பட்ஜெட் 8 கோடி ரூபாய் என்றும் இரண்டாவது முறையாக கிரிசய்யா இயக்கிய ’ஆதித்யா வர்மா’ படத்தின் பட்ஜெட் 7 கோடி ரூபாய் என்றும் ஆக மொத்தம் இந்த படத்திற்காக விக்ரம் 15 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளதாகவும் ஆனால் வசூல் 8 கோடி மட்டுமே வந்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

இதனையடுத்து இந்த படத்தில் 7 கோடி நஷ்டத்தை ஈடுசெய்ய பாலா இயக்கிய ’வர்மா படத்தை நெட்பிளிக்ஸில் வெளியிட விக்ரம் முடிவு செய்துள்ளதாகவும் அதன் மூலம் ஒரு ஆறு கோடி ரூபாயை அவருக்கு கிடைக்கும் என்றும் இதனால் அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் வெகுவாக குறையும் என்றும் கூறப்படுகிறது. எனவே பாலா இயக்கிய வர்மா படம் நெட்பிளிக்ஸில் ரிலீசாகும் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன