காக்கா முட்டை படம் மூலம் அனைவரிடத்திலும் பரிட்சயமானவர் மணிகண்டன். இப்பட வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை, விதார்த்தை வைத்து குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

இப்போது கடைசி விவசாயி படத்தை இயக்கியுள்ளார். கிராமத்து மனிதர்களின் எளிய வாழ்க்கையையும் விவசாயத்தையும் எளிமையாக இயக்கியுள்ளார் மணிகண்டன்.
விஜய் சேதுபதியும் இப்படத்தின் சில காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றமே தண்டனைக்கு பிறகு இசைஞானி இளையராஜாவுடன் மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார் மணிகண்டன்.
