ரஜினியை போலவே தனுஷை மாற்றிய கார்த்திக் சுப்புராஜ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் ரஜினியை அந்த படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வித்தியாசமான வேடத்தில் தோன்ற வைத்திருப்பார். குறிப்பாக பிளாஷ்பேக் காட்சியில் முறுக்கு மீசையுடன் வேட்டி சட்டை கெட்டப் ரஜினிக்கு…


53149d69e5861c69857a6067b131ea12

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் ரஜினியை அந்த படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வித்தியாசமான வேடத்தில் தோன்ற வைத்திருப்பார். குறிப்பாக பிளாஷ்பேக் காட்சியில் முறுக்கு மீசையுடன் வேட்டி சட்டை கெட்டப் ரஜினிக்கு பொருத்தமாக இருந்தது என்பதும், இந்த கெட்டப்பை ரசிகர்களை ரசித்து மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினியின் முறுக்கு மீசை மற்றும் வேஷ்டி-சட்டை கெட்டப்பை தனுஷூக்கு தற்போது அவர் நடித்து வரும் சுருளி என்ற படத்திலும் கார்த்திக் சுப்புராஜ் வைத்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது சென்னையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில்தான் தனுஷ் முறுக்கு மீசை கெட்டப்பில் கலந்து கொள்கிறார்.

e3c526b18ff9f6a191e65c91f15a92e7

இந்த படத்தின் கதைப்படியும் பிளாஷ்பேக் காட்சியில் தான் தனுஷ் இந்த முறுக்கு மீசை கெட்டப்பில் தோன்றுகிறார் என்று கூறப்படுகிறது. பேட்ட’ படம் போலவே இந்த படத்திலும் தனுஷூக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கெட்டப் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன