குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஒரு சில இடங்களில் வன்முறை நடந்து வருகிறது. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் பல்கழைக்கழகம் உள்ளிட்டவற்றில் நடக்கும் போராட்டங்களில் வன்முறை அதிக அளவில் உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி
கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் கடமைப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு, ஆனால் சட்டத்தை மீறக்கூடாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அமைதியான வழியில் போராடுவது பற்றி தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் நபர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என கஸ்தூரி கூறியுள்ளார்.