சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு ஆர்வக்கோளாறு என்பது சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இருந்துதான் வருகிறது. ஆரம்ப காலத்தில் படம் வந்த பிறகு ஆள் உயர கட் அவுட்தான் வைப்பார்கள். சுவர் விளம்பரம் செய்வார்கள்.
இப்போது ஆர்வக்கோளாறில் அதிகமான ப்ளக்ஸ் போர்டுக்களை வித விதமாக டிசைன் செய்து வைக்கிறார்கள்.
இது படம் வந்த பிறகு வைப்பது, ஆனால் படம் வராமலேயே பெயர் வைக்காமலேயே ஃபோட்டோ ஷாப் உபயத்தோடு தங்கள் நடிகர்களுக்கு டைட்டில் வைத்து மாஸ் போஸ்டராக அதை உருவாக்குவது என ஈடுபடுகின்றனர்.
அது போல் டிரெய்லர் உள்ளிட்டவற்றையும் மாற்றுகின்றனர். ரஜினி நடித்த தர்பார் பட டிரெய்லர் நேற்று முன் தினம் வெளியான நிலையில் சில முகநூல் ரஜினி பேஜ்களில் டிரெய்லரை ரீ எடிட் செய்து மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளனர். ஒரிஜினல் டிரெய்லரை விட இது நன்றாக இருந்தாலும் கம்பெனி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாது அல்லவா, அதனால் வெளியிட்ட சில மணி நேரங்களில் அந்த வீடியோவை யூ டியூப் நிர்வாகம் நீக்கியுள்ளது.