
தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த பாபிலோனாவின் சகோதரர் சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ் சினிமாவின் பல படங்களில் ஒரு பாடலுக்கு குத்து பாட்டு நடனமும், கவர்ச்சி வேடங்களிலும் நடித்து வந்தவர் பாபிலோனா. இவரது சகோதரர் விக்னேஷ் குமார் என்பவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த நிலையில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை அவர் அடித்ததாக தெரிகிறது
மேலும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் அங்கு உள்ள சிலரிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து விக்கியை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். நடிகை ஒருவரின் சகோதரர் குடிபோதையில் கைது செய்யப்பட்டது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது