கடந்த 2019ல் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பில் கீர்த்தி சுரேஷ் பெயர் இடம்பெற்றது. இவர் தமிழில் நடிகையர்திலகம் என்றபெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் இப்படம் ரிலீஸ் ஆனது.
இது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வந்த கதை.
இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷன் மகாநதி, தமிழை விட அதிக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. சாவித்திரி கதாபாத்திரமாகவே கீர்த்தி சுரேஷ் வாழ்ந்து இருந்தார்
இந்த மகாநதிக்கு கடந்த ஆண்டு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டார்.
இன்று தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இவருக்கு விருதை வழங்கினார்.