கிறிஸ்மஸ் கொண்டாட அஜித் விஜய் எடுத்த ஒரே மாதிரியான முடிவு

By Staff

Published:


b4a4215c732b79144d6d2559af6e92bd

‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த தளபதி விஜய் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். ஷிமோகாவில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போதிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக பிரேக் எடுத்துவிட்டு விஜய் சென்னை திரும்பியதாக கூறப்பட்டது

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த அஜீத்தும் இன்று காலை சென்னை திரும்பியுள்ளார். ’வலிமை’ படப்பிடிப்பும் தொடர்ச்சி தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாகவும் ஆனால் அஜித் மட்டும் நான்கு நாட்கள் பிரேக் எடுத்து குடும்பத்தினருக்கும் கிறிஸ்மஸ் கொண்டாட சென்னை திரும்பி உள்ளதாகவும் அடுத்த வாரம் அவர் மீண்டும் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது

எனவே அஜித், விஜய் ஆகிய இருவரும் தாங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் இருந்து பிரேக் எடுத்து குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்னை திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment