இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கிய முதல் படமான இரும்புத்திரை படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் இயக்கிய ஹீரோ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது
இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களை தொடர்ச்சியாக வெற்றி படமாக்கிய இயக்குனர் மித்ரனின் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் கார்த்தி, பிஎஸ் மித்ரன் இயக்கும் படத்தில் வரும் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மித்ரன்-கார்த்தி இணையும் இந்தப் படமும் ஒரு சமூக பிரச்சனையை மிக ஆழமாக அலசவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது