வெற்றியாளர்கள் கூட தற்கொலையை நாடுவதா? நடிகை கஸ்தூரி அதிர்ச்சி!

லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளர் ராமன் அவர்கள் நேற்று இரவு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திரையுலகினர் தங்களது அதிர்ச்சி கலந்த இரங்கலை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி…

லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளர் ராமன் அவர்கள் நேற்று இரவு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திரையுலகினர் தங்களது அதிர்ச்சி கலந்த இரங்கலை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர்

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், நடிகர் விவேக் உள்பட பல திரை கலைஞர்கள் ராமன் மறைவை இன்னும் நம்ப முடியவில்லை என்று தங்களுடைய அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமன் மறைவு குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் அவர்கள் தற்கொலையா? அளவு கடந்த அதிர்ச்சியும் துக்கமும் தொண்டையை அடைக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க வார்த்தையே இல்லை. சமூகத்தில் சிறந்தவர்கள், வெற்றியாளர்கள் கூட தற்கொலையை நாடுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன