அன்னக்கிளி படம் மூலம் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தால் கண்டெடுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் அளவிட முடியாதது.
இவரின் பாடல்கள்தான் இன்று புரையோடி போய் பிரச்சினைகள் கடுமையாய் இருக்கும் இந்த காலத்துக்கு இனிய மருந்தாக உள்ளது.
அவரின் அந்தக்கால பாடல்கள் பெரிய அளவில் இன்றும் பலரால் விரும்பி கேட்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் அவர் இசையமைத்த பாடல்கள் ஹிட் ஆகி வருகிறது.
சமீபத்திய சைக்கோ பட பாடல் ஹிட்டுக்கு பிறகு இசைஞானி இசையமைத்து விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் படப்பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சித் ஸ்ரீராமை வைத்து ஒரு அதிரடி பாடலையும் இப்படத்தில் உருவாக்கி இருக்கிறார் இசைஞானி. இப்படத்தில் உள்ள மெலடி பாடல்களும் இளையராஜாவின் அக்கால பாடல்கள் போல் உள்ளதாக சிலாகிக்கிறார்கள் ரசிகர்கள்.
சமீபத்தில் வெளியான இப்பாடல்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.