எஸ்பி பாலசுப்பிரமணியன் மகனின் அடுத்த அவதாரம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மகனான எஸ்பிபி சரண், ‘உன்னை சரணடைந்தேன், சரோஜா விழித்திரு உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும், ஆரண்யகாண்டம், நாணயம், சென்னை-28, மழை போன்ற…


2da19c72dc0e4f8174d3250080fa4855

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மகனான எஸ்பிபி சரண், ‘உன்னை சரணடைந்தேன், சரோஜா விழித்திரு உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும், ஆரண்யகாண்டம், நாணயம், சென்னை-28, மழை போன்ற ஒரு சில படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் தெரிந்ததே. அது மட்டுமின்றி தனது தந்தையைப் போல அவர் பல பாடல்களைப் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அடுத்ததாக அவர் ஒரு வெப்சீரீஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளார் இந்த வெப்சீரிஸ்ஸூக்கு ’அதிகாரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் புகழ்பெற்ற கேபிள் சங்கர் இயக்கும் இந்த வெப்சீரீஸில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது

இந்த படத்திற்கு தீன தேவராஜன் என்பவர் இசையமைக்கிறார். இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் தமிழின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் இந்த வெப்சீரீஸ் ஒளிபரப்ப உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன