விஜய்சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்

By Staff

Published:

b29cb6dd0a8bff1ab47df7e63f30d1cd

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது அரை டஜனுக்கும் மேலான படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களாக சென்னை மற்றும் பிற நகரங்களில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் மேகாஆகாஷ், விவேக், மோகன் ராஜா உள்பட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா இணைந்துள்ளார்

இவர் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் இனிமேல்தான் தெரியவரும்

Leave a Comment