விக்ரமின் ’கோப்ரா’ எந்தப் படத்தின் காப்பி: பரபரப்பு தகவல்

By Staff

Published:


d51a409b4430fadd36573813dfba2b1c

விக்ரம் நடித்து வரும் ’கோப்ரா’ படத்தில் அவர் 7 வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் ’கோப்ரா’ படத்தில் 7 கெட்டப்புகளில் 7 கொலைகள் விக்ரம் செய்வதுதான் கதை என்றும் அவர் எதற்காக கொலை செய்கிறார் என்பது கடைசி சில நிமிடங்களில் வெளிவரும் சஸ்பென்ஸ் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அஜித் நடித்த சிட்டிசன் படத்தின் காப்பி தான் இந்த ’கோப்ரா’ என்றும் அதில் ஒவ்வொரு கெட்டப்பிலும் அஜித் ஒவ்வொரு கொலை செய்தது போலவே இந்த படத்தில் விக்ரம் ஒவ்வொரு கெட்டப்பிலும் ஒவ்வொரு கொலை செய்கிறார் என்று கூறப்படுகிறது

Leave a Comment