இதோ அதோ என இழுத்துக்கொண்டிருந்த மாநாடு படம் ட்ராப் ஆனது போல் சென்று பல பஞ்சாயத்துகளுக்கு பின்பு இப்போதுதான் சுரேஷ் காமாட்சி தயாரிக்க படமாகி வருகிறது.
இந்நிலையில் கொரோனா அட்டாக்கால் இந்தியா முழுவதும் வரும் 31ம்தேதி வரை ஷூட்டிங்கை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் மாநாடும் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,
கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா இடம் கொடுப்போம்?
இந்த பேக் அப் இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் எஸ்டிஆர்தான்.
மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் “மாநாடு”
என சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார்.