கொரோனா ஹாலிடேஸை பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் தனக்கு பயனுள்ளதாக்கி வருகின்றனர். பல நடிகர் நடிகைகள் வீட்டு வேலைகள் செய்வதை பழகி கொண்டுள்ளனர். சிலர் புதிது புதிதாக ஸ்வீட் செய்வதும், பஜ்ஜி, போண்டா ஸ்னாக்ஸ் செய்வதும் தான் வாடிக்கையாக உள்ளது.
![0472444f94cf4c66ca9b73fdeb3607ab](https://tamilminutes.com/wp-content/uploads/2020/04/0472444f94cf4c66ca9b73fdeb3607ab.jpg)
சிலர் பாடுவது ஆடுவது, யோகா, எக்ஸர்சைஸ், என தனக்கு பிடித்த கலைகளை மனமுவந்து வீட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் விஜயகுமாரும் தனக்கு மிகவும் தெரிந்த சிலம்பத்தோடு தொடர்புள்ள கம்பு சுற்றும் கலையை தனது வீட்டின் மொட்டை மாடியில் செய்து வருகிறார்.
இதை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள நடிகர் விஜயகுமாரின் மகனும் நடிகருமான் அருண் விஜய் குவாரண்டைன் டைரீஸ் என குறிப்பிட்டுள்ளார்.