தமிழர் அமைப்புகள் என சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான அமைப்புகள் உலகமே வியக்க தமிழன் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலை அவர்கள் சந்தர்ப்பவாதத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்பது கண்கூடான விசயம்.

பூமணி, கிழக்கும் மேற்கும் ,பூந்தோட்டம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் களஞ்சியம் தான் ஒரு தமிழ் போராளி என்று சொல்லி கொள்வார். ஆனால் உலகத்தமிழர்களின் மனசாட்சியாய் உலகமே வியக்க ராஜராஜன் கட்டிய கோவிலை மற்ற விசயங்களோடு கம்பேர் பண்ணி ஜோதிகா பேசியது தவறு என்றாலும் முட்டுக்கொடுத்து பேசுவார் .
இவர் சமீபத்தில் நடிகை ஜோதிகா பேசிய பேச்சுக்கு அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் முழுவதும் ஜோதிகாவின் பேச்சுக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கும் இயக்குனர் களஞ்சியம் , யாராவது ஜோதிகா பேச்சை எதிர்த்து வந்தால் அறுத்துறுவோம் என்ற வகையில் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இயக்குனர் களஞ்சியத்துக்கு பதிலடி கொடுக்கும் வீடியோக்களை அவர் தனது பேஸ்புக் பேஜில் வெளியிட்டு வருகிறார். இன்று களஞ்சியத்துடன் சேர்த்து ராஜேந்திர சோழன் என்ற இயக்குனருக்கும் தனது கடுமையான சாட்டையடி பதிலை கொடுத்துள்ளார்.
முதல் லிங்கில் களஞ்சியம் பேசிய வீடியோ அடுத்த லிங்கில் நடிகை விஜயலட்சுமி பேசிய வீடியோ