நடிகர் சரத்குமார் ஒரு தெலுங்கு ஊடகத்தில் பேட்டியளித்துள்ளார். தெலுங்கு ஊடகமல்லவா , அந்த மாநில சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை பற்றி கேட்காமல் இருப்பார்களா? சிரஞ்சீவியை பற்றி கேட்டதற்கு பதில் கூறிய சரத்குமார்.
ஒரு முறை நான் பண பிரச்சினையில் இருந்தேன். அப்போது ஒரு தயாரிப்பாளர், சிரஞ்சீவியிடம் கால்ஷீட் வாங்கி கொடுங்கள், அவரை வைத்து படம் எடுப்போம். அதன் மூலம் வரும் லாபத்தை உங்களுக்குத் தருகிறேன். உங்கள் பிரச்சனையை தீர்க்க அது உதவும் என்றார்.
பிறகு சிரஞ்சீவியிடம் கால்ஷீட் கேட்க சென்றபோது ஒரு படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். உங்களிடம் தனியாக பேச வேண்டும் என கேட்டபோது எனக்காக படப்பிடிப்பையே நிறுத்த செய்து தன் வீட்டுக்கு அழைத்து சென்று பேசினார். நான் கேட்ட கால்ஷீட்டையும் கொடுத்தார். மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் நான் இருந்த நேரம் அது. அந்த நேரத்தில் சிரஞ்சீவி செய்த உதவி மிகப்பெரியது.
உங்க சம்பளம் எவ்வளவு என சிரஞ்சீவியிடம் கேட்டதற்கு நீயே கஷ்டத்தில் இருக்கிறாய். இதெல்லாம் எதற்கு கேட்கிறாய் . கால்ஷீட் தருகிறேன் என அன்போடு கூறினார் என சிரஞ்சீவி பற்றிய நினைவலைகளை பகிர்ந்துள்ளார் சரத்.