ரைசா வில்சன் விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட தமிழ் பிக் பாஸில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்னர் வேலையில்லாப் பட்டதாரி 2 வில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த இவருக்கு அதன்பின்னர் பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின்னர் இவர் நடித்த தனுசு ராசி நேயர்களே திரைப்படமும் ஹிட் ஆக, ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, FIR, ஹேஸ்டேக் லவ் போன்ற படங்களில் நடித்து பிசியாக வருகிறார்.
இவரது படங்களுக்கு இருக்கும் வரவேற்பினைவிட, சமூக வலைதளங்களில் போட்டோ பதிவிடுவதில் இவருக்கு இருக்கும் வரவேற்பு கொஞ்சம் ஜாஸ்திதான். அதிலும் ஊரடங்கினால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் போக, வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு விதவிதமாக போட்டோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார்.
.குழந்தை வயது புகைப்படம், அம்மா அப்பாவின் இளமைக் காலத்து புகைப்படம், ரைசாவின் பழைய புகைப்படங்கள் என அடையாளம் தெரியாத பல புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கையில் பொம்மை வைத்து இருப்பதுபோல் குட்டிப் பாப்பா புகைப்படத்துடன் ஏலியன் போட்டோ ஒன்றை மெர்ஜ் செய்து பதிவிட்டுள்ளார்.
மேலும் ”ரெண்டும் ஒண்ணுதான், ஆனா வேற” என்று பதிவிட்டு அனைவரையும் குழப்பி உள்ளார்.