கடந்த 1991 முதல் குழந்தை நட்சத்திரத்திலிருந்து தொடர்ந்து நடித்து ஆந்திரா மாநிலத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தவர் ஜூனியர் என் டி ஆர்.
ஆந்திரா முன்னாள் முதல்வரும் நடிகருமான என். டிராமாராவின் மகனான என் டி நந்த மூரி ராவின் மகனும் என்.டி ராமாரவின் பேரனுமாவார்.
இவர் நடிகர் மட்டுமல்லாது குச்சிப்புடி டான்ஸர், நடனபயிற்சியாளர் என பல்வேறு திறமைகளுடன் விளங்குகிறார்.
தெலுங்கில் வெளியான ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படம் இவரது வெற்றிக்கு முக்கிய காரணம்
இன்று இவரின் பிறந்த நாள் ஆகும். ஆந்திராவில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் அதனால் காலையில் இருந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.