கெளதம் மேனன் இயக்கி சிம்பு, த்ரிஷா நடித்துள்ள குறும்படம் கார்த்திக் டயல் செய்த எண். இதில் லாக் டவுனில் வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் ஒரு ஆணும் மற்றொரு வீட்டின் ஒரு பெண்ணும் மொபைலில் பேசிக்கொள்வதாக காட்சிகள் அமைகின்றன.
சிம்புவும் , திரிஷாவும் இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளனர். கடைசியில் பார்த்தால் பெண் திருமணமானவர் என தெரிகிறது. லாக் டவுனால் குழப்பமடைந்திருக்கும் பெண் தனது முன்னாள் காதலருடன் ஃபோனில் பேசுவதாக காட்சிகள் அமைந்துள்ளது.
இந்த படத்தை நெட்டிசன்கள் சரமாரியாக வறுத்தெடுத்து வருகின்றன. ஏன் இப்படி எல்லாம் கெளதம் மேனன் படம் எடுக்கிறார் என அவரை தாறுமாறாக விமர்சித்து சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.