கொரோனா பாடல் தினசரி ஏதாவது ஒரு பாடல் வந்து கொண்டுள்ளது. கொரோனாவை பற்றி விதவிதமாக கற்பனைகளில் எழுதி கொரோனாவை எதிர்த்து தினசரி பாடல்கள் வந்துகொண்டிருக்கிறது.

இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் மெட்டிலேயே நிறைய பாடல்கள் வந்து விட்ட நிலையில், இசைஞானி இளையராஜாவே ஸ்ட்ரெயிட்டாக ஒரு பாடலை இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
இந்த பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இந்த பாடலில் லிடியன் நாதஸ்வரம் கீபோர்டு வாசித்துள்ளார். இந்த பாடலை கொரோனா வைரஸில் இருந்து நம்மை காக்கும் போராளிகளுக்கு சமர்பணம் செய்துள்ளார். இந்த பாடல் ஹிந்தியிலும் வெளியாகியுள்ளது.
