ஒரு படத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு அதே கதையை அந்தந்த மொழிகளுக்கு ஏற்றது போல் மாற்றி அமைத்து திரைப்படங்கள் எடுப்பது வழக்கம். பிரதான மொழியில் ஹிட்டான படங்கள் வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் போது சில அதை விட ஹிட்டாகின்றன. சில படங்கள் தோல்வியைத் தழுவி விடுகின்றன.
ஆனால் பாடல்களுக்கு அப்படியில்லை. இருக்கும் 7 ஸ்வரங்களிலேயே பாடல்கள் இசைக்கப்படுவதால் ஏதேனும் ஒரு பாடலைக் கேட்கும் போது இது அந்தப் பாடல் போன்று உள்ளது என எளிதாகக் கண்டுபிடித்து விடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் இயக்குநர் மிஷ்கினின் முதல் படமான சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற ‘வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..‘ என்ற பாடல்.
எத்தனையோ இயற்கையை ரசித்து எழுதிய கவிஞர்களுக்கு மத்தியில் முதன்முதலாக மீனை வைத்து ஒரு பாடலையே இயற்றி அதை தானே பாட்டாக் பாடி வெற்றிப் பாடலாக மாற்றியவர் கானா உலகநாதன். இந்த ஒரு பாடல் மூலம் மிகப் பிரபலமானார் கானா உலகநாதன். மாளவிகாவின் நடனம் இந்த பாடலுக்கு மேலும் வெற்றியைக் கொடுத்தது.
ஆரம்பத்தில் சரியாகப் போகாத சித்திரம் பேசுதடி படம் இந்தப் பாடல் ஹிட்டானதையடுத்து மீண்டும் சக்கைப் போடு போட்டது. இயக்குநர் மிஷ்கின் தமிழ்சினிமாவின் ஐகானிக் இயக்குநராக மாறினார். இப்படி ஒரு பாடலால் மொத்த படமுமே திருப்புமுனையானது. ஆனால் இந்தப் பாடல் பழைய பாடல் ஒன்றின் அதேமெட்டு என்பது பலருக்கும் தெரியாது.
‘வானத்தைப் போல‘ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? பின்னர் கேப்டனுக்காக செதுக்கிய விக்ரமன்
1970 -ல் வெளியான மாணவன் திரைப்படம் மூலமாக அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கமல்ஹாசன் மாணவன் படம் மூலமாக முதன்முதலாக இளைஞராக நடித்தார். எனினும் இந்தப் படத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர்.
சங்கர் கணேஷ் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலான விசிலடிச்சான் குஞ்சுகளா, குஞ்சுகளா என்ற பாடலில் கமல்ஹாசன் நடனமாடியிருப்பார். இவருடன் குட்டி பத்மினியும் ஆடியிருப்பார். டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா பாடிய இந்தப் பாடல் தான் பல வருடங்களுக்குப் பிறகு சித்திரம் பேசுதடி படத்தில் ‘வாள மீனுக்கும் ..‘ பாடலாக அதே மெட்டில் உருவாகி ஹிட் ஆனது.