வானத்தைப் போல படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? பின்னர் கேப்டனுக்காக செதுக்கிய விக்ரமன்!

ஒரு பக்கம் அடிதடி, தீவிரவாதிகளைப் பந்தாடி பறந்து பறந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்தை அப்படியே மாற்றி மூன்று தம்பிகளுக்கு அண்ணாக, பொறுமையின் உச்சமாக, பொறுப்புகள் நிறைந்த பொறுமையான ஒரு மூத்த அண்ணனாக காட்டிய படம் தான் வானத்தைப் போல.

கேப்டன் விஜயகாந்துக்கு அதிக நாட்கள் ஓடிய படங்களில் இந்தப் படமும் ஒன்று. படம் முழுக்க அண்ணன் தம்பி சென்டிமென்ட், இடையே அவ்வப்போது மீனாவுடன் காதல், பிரபுதேவாவின் சேட்டை நடிப்பு, ரமேஷ்கண்ணாவின் காமெடி என படம் முழுக்க சிறதளவு கூட வன்முறை, ஆபாசம், ரத்தம் என எதுவுமே இல்லாமல் இயக்குநர் விக்ரமனின் அக்மார்க் குடும்பப் படமாக இருந்தது வானத்தைப் போல.

சிறந்த குடும்ப திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்ற இப்படம் வசூலிலும் மகத்தான சாதனை புரிந்தது. இந்தப் படத்திற்கான கதையை முதலில் வேறு விதமாக இயக்குநர் விக்ரமன் தயாரித்து வைத்திருந்தாராம். அதாவது ஒரு பெரிய அண்ணன், தம்பிகள், தங்கை என அவர்களுக்குள் நிகழும் பாசப் போராட்டங்களை வெளிப்படுத்தும் விதமாக அருமையான திரைக்கதையை உருவாக்கி வைத்திருந்தாராம். இந்தக் கதையை ஜனகராஜை மனதில் வைத்துத்தான் எழுதினாராம்.

இயக்குநர் சரணைப் பார்த்து கெட் அவுட் சொன்ன ஏ.வி.எம். சரவணன்.. மோதலில் உருவாகி மாஸ் ஹிட் அடித்த விக்ரம் படம்

ஜனகராஜ் மூத்த அண்ணனாகவும், நெப்போலியன், சுவலட்சுமி தம்பி தங்கை என கதையை செட் செய்திருந்தார் இயக்குநர் விக்ரமன். பின்னர் இக்கதையை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியிடம சொல்ல அவரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார். பின்னர் இந்தக் கதைக்கு சரத்குமார் ஹீரோவாக நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் ஆலோசனை கூற அதற்கு விக்ரமன் இப்பொழுதுதான் சரத்குமாருக்கு நாட்டமை படம் பெரும் வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

அதில் கம்பீரமான நாட்டாமையாக அவர் நடித்துள்ளார். உடனே நாம் மீண்டும் அவருடைய இமேஜை அப்படியே மாற்றும் விதமாக சாந்தமான அண்ணனாக நடித்தால் அது அவருக்குப் பொருந்தாது என்று கூறியிருக்கிறார். எனவே சரத்குமாருக்காக பின்னர் மறுபடியும் ஒருகதையை எழுதி அதை சூர்யவம்சமாக எடுத்து ஹிட் கொடுத்தார்.

அதன்பின் தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த அண்ணன் தம்பி கதையை கேப்டன் விஜயகாந்திடம் சொல்ல அவரும் ஒகே சொல்லி பின்னர் அவருக்காக கதையில் ஹீரோயிசத்தில் சிறிய மாற்றங்கள் செய்து வானத்தைப் போல என்னும் அழகிய திரைப்படதைக் கொடுத்தார் இயக்குநர் விக்ரமன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews