சென்னை அரசு தலைமை மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்கச் சொல்லிய தலைவர் இவர்தானா? மறைக்கப்பட்ட வரலாறு..

Published:

தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரில் மத்திய ரயில் நிலையம் எதிரே வானுயர்ந்த கட்டிடங்களால் வீற்றிருக்கிறது அரசு தலைமை மருத்துவமனை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு உயரிய சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து திரும்புகின்றனர் நோயாளிகள். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் முதலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1664-ல் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை  பின்பு 1835 முதல் தற்போது உள்ள இடத்தில் செயல்பட்டுவருகிறது. தினமும் புற நோயாளிகளாக தோராயமாக 12,000 பேர் சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர்.

மக்கள் நல்வாழ்த்துறையால் செயல்படுத்தப்படும் இந்த மருத்துவமனையில் இல்லாத பிரிவுகளே கிடையாது.  அதன்பின் இந்த மருத்துவமனையுடன் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்-ம் (MMC) இணைந்தது. இந்த மருத்துவமனையில் 52 ஆபரேஷன் தியேட்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் வார்டுகள் உள்ளன. இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு சுமார் 1,400 கன மீட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது, இது சிலிண்டர்களைப் பயன்படுத்தி 1,052 விற்பனை நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் தினமும் சுமார் 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்களும், பாரம்பரியமும் கொண்ட இந்த மருத்துவமனை முதலில் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரத்திற்குப் பின்னர் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. நாளடைவில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் செயல்படத் தொடங்கியது.

தன்னை மேடைகளில் விமர்சித்து பேசிய கம்யூனிஸ்ட் பேச்சாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த Thuglife சம்பவம்..

இந்த மருத்துவமனையின் பெயரானது ஆரம்ப காலகட்டங்களில் அரசு பொது மருத்துவமனை, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், சென்னை என்ற பெயரிலிலேயே செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 1991-ல் ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டத்திற்கு வருகை புரிந்த ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட அங்கிருந்த பலரும் பலத்த காயமடைந்தனர். அவற்றில் ஒருவர்தான் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் தா.பாண்டியனும். ராஜீவ் காந்திக்காக மொழிபெயர்ப்பு செய்யச் சென்றவர் அப்போது குண்டு வெடித்த போது அவரும் படுகாயமுற்றார்.

அப்போது ராஜீவ் காந்தியின் உடலானது சென்னை அரசுப் பொதுமருத்துவமனையில்தான் வைக்கப்பட்டிருந்தது. தா.பாண்டியனும் படுகாயங்களுடன் அங்கேதான் சிகிச்சையும் பெற்றார். அப்போது தா.பாண்டியன் விடுத்த கோரிக்கைதான் இந்த மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது. நீண்ட வருட இழுபறிக்குப் பின் ஜனவரி 2011 இல், இந்த மருத்துவமனை “ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை” என மறுபெயரிடப்பட்டது.

மேலும் உங்களுக்காக...