சின்ன வயசில் படங்களை பார்த்து பார்த்து கேசட்ட தேய்ச்சிருக்கேன் – லோகேஷ் கனகராஜ்

By Staff

Published:

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜயை வைத்து படம் இயக்கப்போவது இவர்தான் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு என பலர் நடிக்க இருக்கின்றனர்.

0919876279ea4ac5d62923d004bb09cc-1

லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிறு வயதில் கமல் சாரை பார்த்துதான் நிறைய கற்றுக்கொண்டேன் அவரின் வெறித்தனமான ரசிகன்.

படத்தின் மீது உள்ள ஆசையால் குறும்படங்கள் எடுத்துதான் சினிமா இயக்கம் பற்றி கற்றுக்கொண்டேன். கமல் சாரிடம் அசிஸ்டண்டாக சேர வேண்டும் என நினைத்தேன் அது முடியவில்லை.

மாநகரம் முடிந்த உடன் கமல் சாரை சந்திக்க மட்டும் முடிந்தது.

சின்ன வயசில் படத்தின் மீது உள்ள ஆர்வத்தை பார்த்து எங்க மாமா ஒரு விசிஆரை எனக்கு கொடுத்தார். எனக்கு கமல் படம் விருப்பம் என்பதால் எங்க ஊரில் உள்ள ஒரு கடையில் 4 படம் தான் கமல் படம் வச்சிருப்பாங்க. சத்யா, டிக் டிக் டிக், அலாவுதீனும் அற்புத விளக்கும், விக்ரம் இந்த 4 படத்தை தான் திரும்ப திரும்ப எடுத்து பார்ப்பேன் வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளையும் இதைதான் திரும்ப திரும்ப பார்ப்பேன். இதில் சத்யா படத்தில் வரும் ஃபைட் சீக்வன்ஸ திரும்ப திரும்ப பார்த்து அந்த கேசட்டே தேய்ந்து போய்விட்டது என கூறியுள்ளார்.

Leave a Comment