இந்த ஒரு விஷயத்துக்காக இளைய மகனை கை நீட்டிய கேப்டன் விஜயகாந்த்.. அன்று மாறிய பழக்கம்..!

Published:

தமிழ் படங்களைத் தவிர வேறு எந்த மொழிப் படங்களிலும் நடிக்காமலேயே 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் தான் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் நடிகர், அரசியல்வாதி என்பதைத் தாண்டி அவரிடம் இருந்த இரக்க குணமும், நல்ல மனமும் தான் கோடிக்கணக்கான மக்களை அவர் இறப்பின் போது கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

சமீபத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தனியார் தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சியில் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகனான சண்முகப் பாண்டியன் கலந்து கொண்டு தனது தந்தையுடனான நினைவுகளைப் பகிர்ந்தார்.

அதில், ஒருமுறை சண்முகப் பாண்டியன் லண்டன் சென்றிருந்த நேரம் அங்கே நிறையபேர் டாட்டூ குத்தியிருந்திருக்கிறார்கள். இதனைப் பார்த்த சண்முகப் பாண்டியனுக்கம் டாட்டூ ஆசை வரவே அங்கேயே தனது தந்தை விஜயகாந்தின் உருவத்தினை டாட்டூவாகக் குத்தியிருக்கிறார். ஒருமுறை ஒரு நிகழ்வில் இதனைப் பார்த்த விஜயகாந்த் டாட்டூ குறித்து என்னவென்று கேட்க, உங்களை அடிக்கடி பார்க்க முடியாது அல்லவா, அதனால் தான் எப்பவுமே உங்களைப் பார்க்கும் பொருட்டு டாட்டூ குத்தியிருக்கிறேன் என்று கூற மகனின் பாசத்தை நினைத்து விஜயகாந்த் நெகிழ்ந்து போயிருக்கிறார்.

ஒருவரி கூட கிடைக்காமல் திண்டாடிய நான்கு கவிஞர்கள்.. போட்ட டியூனுக்கு முழுப்பாட்டையும் எழுதிய இளையராஜா..

அடுத்ததாக ஒருமுறை அண்ணன் விஜய பிரபாகரனை ஒருமுறை போடா, வாடா என்று அழைத்தாராம் சண்முகப் பாண்டியன். இதனைக் கவனித்த விஜயகாந்த் சண்முகப் பாண்டியனை அழைத்து அடித்து கண்டித்திருக்கிறார். விஜய பிரபாகரனை இனி நீ அண்ணா என்றுதான் அழைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூற, அன்றிலிருந்து சில வயதே மூத்திருந்தாலும் பிரபா அண்ணா என்று அழைப்பது தான் வழக்கம். இப்படி தனது குடும்பத்தில் கூட உறவுகளின் உன்னதத்தை தனது பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்த்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.

மேலும் உங்களுக்காக...