ஓடும் ரயிலில் திடீரென அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய கேப்டன்… காரணத்தை கேட்டா கண்ணே கலங்கிடும்!

By John A

Published:

தமிழ் சினிமாவில் செல்லமாக கேப்டன் என அழைக்கப்படும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்தின் கொடைத்தன்மையைப் பற்றி ஏராளமான தகவல்கள் இருந்தாலும் இது முற்றிலும் புதிது. நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது. அந்த நேரத்தில் குஜராத் பூகம்பத்தால் நாடே அழுது கொண்டிருந்தது.

இந்நிலையில் கேப்டன் அவர்கள் குஜராத் பூகம்ப நிவாரண நிதி திரட்ட மதுரையில் நட்சத்திர கலைவிழா ஒன்றை ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்து விழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள் பயணம் பொருட்டு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரயில் கிளம்பிய சில நிமிடங்களில் எல்லாரும் வந்து விட்டார்களா என கணக்கெடுப்பில் விஜயகாந்த் ஈடுபட்டார்.

கலைஞர்கள் முகத்தினை பார்த்த உடனே அவருக்கு புரிந்து விட்டது. அவசர பயணம் அதனால் எவருமே விழாவில் சாப்பிட வில்லை என அறிந்தார். திடீரென ஓடும் ரயில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். மதுரை-திண்டுக்கல் சாலை ஓரத்தில் ஆங்காங்கே தள்ளுவண்டி இரவு உணவு வியாபாரம்.

படத்திற்காக நிறத்தை மாற்றிய பழம்பெரும் நடிகை : கழுவி ஊற்றிய பிரபலங்கள் : வாயடைக்க வைத்த வெற்றி

யோசிக்காமல் அவசர சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, இறங்கி தள்ளுவண்டி கடைகள் நோக்கி நடக்க ஆரம்பித்தார். கேப்டனை பார்த்த பரவசத்தில் கடை முதலாளிகள் கூக்குரல் எழுப்பினர். அமைதிபடுத்திய கேப்டன் என்னை நம்புவீர்களா என்றார், மண்ணின் மைந்தன் உங்களை நம்பாமல் வேறு யாரை நம்ப போகிறோம் என்றனர் முதலாளிகள்.

உடனே கேப்டன் தயாராக இருந்த அனைத்து இரவு உணவுகளையும் குழம்புகள் மற்றும் வாளி பாத்திரங்களை எனக்கு கொடுங்கள் நாளை காலை 10 மணியளவில் மதுரையிலுள்ள என் வீட்டில் போய் அதற்கான தொகையை பெற்று கொள்ளுங்கள் என்றார். இதனைக் கேட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் இக்கடையே உங்களுக்கு சொந்தம் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறினர்.

கேப்டன் மற்றும் மற்ற நடிகர்கள் அனைத்து உணவுகளையும் ரயில் பெட்டிகளில் ஏற்றினர். அனைவருக்கும் நன்றி கூறி ரயில் ஏறினார் கேப்டன். நடிகர் நடிகைகள் அனைவருக்கும் உணவு வழங்கினார். ரயிலை தகுந்த காரணமின்றி அவசர சங்கிலி கொண்டு நிறுத்தினால் அது அபராதத்துக்குறிய குற்றம். உதவி ரயில் ஓட்டுனர் நடந்த நிகழ்வுகளை நேரில் பார்த்தமையால் அபராதம் விதிக்காமல் கேப்டனுக்கு அறிவுரை கூறி விட்டு ரயில் இயக்க சென்றார்.

மறுநாள் கேப்டன் வீட்டிற்கு சென்ற தள்ளுவண்டி கடை முதலாளிகளுக்கு முதலில் விருந்து வழங்கப்பட்டுள்ளது, பின்னர் ஒவ்வொருவரையும் தனித்தனியே வீட்டின் வரவேற்பறையிக்கு அழைத்த கணக்கர் அவர்கள் சொன்ன சொன்ன தொகையை விட மூன்று மடங்கு தொகை அதிகமாக கொடுத்து அனுப்பி உள்ளனர். கடை முதலாளிகள் மகிழ்ச்சியால் திக்குமுக்காடினர். கேப்டனின் உயர்ந்த உள்ளத்திற்கு இச்சம்பவமும் ஓர் எடுத்துக்காட்டு.

மேலும் உங்களுக்காக...