80களில் விஜயகாந்த் நடிப்பில் சக்கை போடு போட்ட படம் பூந்தோட்ட காவல்காரன். செந்தில் நாதன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் எல்லா பாடல்களுமே இளையராஜாவின் இசையில் சூப்பர்ஹிட் தான்.
சமீபத்தில் இந்தப்படத்தின் இயக்குனர் செந்தில்நாதன் பூந்தோட்ட காவல்காரன் படத்தில் நடந்த சில சுவையான சம்பவங்களைத் தெரிவித்துள்ளார். அதைப் பார்க்கலாமா…
என்னை இயக்குனர் ஆக்கியதும் கேப்டன் தான். என் உயிரைக் காப்பாற்றியதும் அவரே தான். முதன் முதலில் விஜயராஜ் என்ற பெயரில் தான் அவரை சந்தித்தேன். நான் எஸ்.ஏ.சந்திரசேகருடன் பணியாற்றினேன். அவர் கேப்டனை வைத்து பல படங்களை இயக்கிக் கொண்டு இருந்தார். கேப்டனின் 10க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன்.
எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. எனது முதல் படத்தை அவரே தயாரித்து ஹீரோவாகவும் நடித்தார். படத்தில் ஒரு காட்சியில் 2 காதலர்கள் ஊருக்கு பயந்து ஓடி வருவார்கள். அப்போது மலையில் இருந்து தவறி விழுவது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது கீழே விஜயகாந்த் இருந்தார்.
அப்போது காதலர்களாக நடித்தவர்கள் சரியாக நடிக்கவில்லை. நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க மலை உச்சிக்குச் சென்றேன். நான் மலையில் இருந்து உருண்டு விழுந்தேன்.

எல்லோரும் பயந்து ஓடிவந்தார்கள். என்னை யாரையும் தொட வேண்டாம் என்று கேப்டன் கூறினார். என் முகம், கை, கால்களில் கற்கள் குத்தியபடி இருந்தன. ஒடிகொலன், பஞ்சு எடுத்து வரச்சொன்னார். அதை மெதுவாக வைத்து ஒற்றி எடுத்தார்.
அதனால், ரத்தம் தொடர்ந்து வரவில்லை. அன்று அவர்தான் என்னைக் காப்பாற்றினார். அதே மாதிரி செந்தில் சொல்லித்தருவது மாதிரி 50 சதவீதம் நடித்தாலே போதும் என்றும் என்னைப் பற்றி பெருமையாகச் சொல்வார்.
இதையும் படிங்க… ஒத்த செருப்பு பாதி.. இரவின் நிழல் மீதி.. ஹன்சிகாவின் புதிய முயற்சி பலனளிக்குமா?..
பூந்தோட்ட காவல்காரன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ராதிகாவை விஜயகாந்த் அடிப்பார். ராதிகா அந்தக் காட்சியில் விலக வேண்டும். ஆனால் அவர் அதை சரியான நேரத்திற்குள் செய்யத் தவறி விட்டார். அதனால் நிஜமாகவே விஜயகாந்தின் அறை அவரது கன்னத்தில் பட்டு விட்டது. அவரால் அந்த அடியைத் தாங்க முடியவில்லை. விஜயகாந்த் பலமாக அடித்துவிட்டார்.
ராதிகா அப்படியே உட்கார்ந்து விட்டார். காது ஙொய்….னு இருந்ததால் சரியாகக் கேட்கவில்லை. அரை மணி நேரத்திற்கு ராதிகாவால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவரது அடியை யாராலும் தாங்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


