ஒத்த செருப்பு பாதி.. இரவின் நிழல் மீதி.. ஹன்சிகாவின் புதிய முயற்சி பலனளிக்குமா?..

இயக்குனர் ராஜு துசா இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி மட்டுமே சிங்கிள் ஆளாக நடித்துள்ள 105 நிமிடங்கள் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு இந்திய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் சிங்கிள் ஷார்ட் மற்றும் சிங்கிள் நபர் நடித்துள்ள படம் என படக்குழு டிரைலர் இல்லையே கொட்டை எழுத்துக்களில் பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஹன்சிகாவின் புதிய முயற்சி:

ஏற்கனவே நடிகர் பார்த்திபன் உலகின் சிங்கிள் ஷாட் படம் என இரவின் நிழல் படத்தை ரிலீஸ் செய்த நிலையில், அதெல்லாம் கிடையாது அதற்கு முன்னதாகவே உலகின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் வெளியாகி விட்டதாக ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து சண்டை போட்டு வந்தார்.

இந்நிலையில் அடுத்து, நடிகை ஹன்சிகா உலகின் முதல் சிங்கிள் ஷார்ட் மற்றும் ஒரு நபர் நடித்த படம் இதுதான் என 105 நிமிடங்கள் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

ஒத்த செருப்பு + இரவின் நிழல்:

ஒத்த செருப்பு சைஸ் ஏழு படத்தில் பார்த்திபன் சிங்கிள் ஆளாக படம் முழுக்க நடித்திருப்பார். மற்றவர்களின் குரல் மட்டுமே ஒலிக்கும் விதமாக அந்த படம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், பார்த்திபனின் இரண்டு படங்களையும் ஒன்றாக கலந்து உருவாக்கிய படத்தை போல இந்தப் படத்தை இயக்குனர் ராஜு துசா உருவாக்கி இருக்கிறார்.

105 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில் உங்களுக்கு ஹன்சிகா மட்டுமே நிறைந்து இருப்பார். ஒரு லாக்கப் ரூமில் மாட்டிக்கொண்டு அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்கிற கதையை மையமாக வைத்து திரில்லர் ஜானரில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். டிரைலரை பார்க்கும்போது கடந்த சில படங்களில் ஹன்சிகா செய்த க்ரிஞ்ச் நடிப்பு இல்லாதது ரசிகர்களுக்கு சற்றே ஆறுதல் கொடுத்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு மஹார், பார்ட்னர் போன்ற படங்களை ரிலீஸ் செய்த ஹன்சிகா, ரவுடி பேபி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அதற்கு முன்னதாக வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தை நினைத்து 105 நிமிடங்கள் படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.