விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்று பரசு, பிரவுன் மணியிடம் சென்று, “என்னுடைய மகளின் நகைகளை இரண்டு பேர் கொள்ளை அடிக்க முயன்றார்கள். ஆனால் என்னுடைய நண்பரின் மகனும் மருமகளும் அவர்களை பிடித்து நகையை காப்பாற்றினார்கள்,” என்று கூறுகிறார்.
இதைக் கேட்ட உடனே பிரவுன் மணி, “வாருங்கள், அவர்களுக்கு மாலை மரியாதை செய்வோம்,” என்று கூறுகிறார். பரசு மற்றும் பிரவுன் மணி இருவரும் முத்து, மீனாவை பார்க்க வரும்போது, முத்து, பிரவுன் மணியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
அப்போது பரசு, “இவர் தான் மாப்பிள்ளையின் தாய் மாமா. இங்கே 30 வருடங்களாக கறிக்கடை வைத்திருக்கிறார்,” என்று அறிமுகம் செய்கிறார். முத்து, அவரையே கூர்மையாக பார்க்க, அதிர்ச்சியில் பிரவுன் மணி எதுவும் பேச முடியாமல் போகிறார். இதையடுத்து, “மாலை மரியாதை செய்ய வேண்டியது எங்களுக்கல்ல, இவருக்குத்தான்,” என்று கூறி, முத்து, பிரவுன் மணியை வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.
வீட்டில் அண்ணாமலையிடம் விஜயா தனது மருமகள் ரோகிணி பற்றி உயர்வாக பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது முத்து வந்து, பிரவுன் மணியை மறைமுகமாக குறிப்பிட்டுச் சொல்கிறார். மேலும், மனோஜ் மற்றும் ரோகிணியையும் அழைக்கிறார். அவர்கள் வந்ததும், “என்ன முத்து உளறுகிறான்?” என்று கேட்கிறார்.
அதற்கு மீனா, “அவர் உளறவில்லை, சரியாகத்தான் சொல்கிறார்,” என்று பதிலளிக்கிறார். பிறகு, பிரவுன் மணியை அழைக்க, அவர் உள்ளே வர, விஜயா மகிழ்ச்சியுடன், “வாங்க சம்பந்தி,” என்று கூறி, உட்கார வைக்கிறார்.
அண்ணாமலை மற்றும் விஜயா மாறி மாறி அவரை நலம் விசாரிக்க, மனோஜ் உடனே,
“என்னோட பிசினஸுக்கு பணம் கொண்டு வந்திருக்கீங்களா?” என்று கேட்கிறார். இதை பார்த்த ரோகிணி, என்ன இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறார், எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று நினைக்கிறார். “முத்து தான் எங்கேயோ பார்த்து கூட்டிட்டு வந்திருக்கிறான்,” என்று முடிவு செய்து சமாளிக்க முயல்கிறார். மேலும் முத்துவையும் கண்டபடி திட்டுகிறார்.
இதற்கிடையில், சில விஷயங்களை மறைமுகமாக கூறிய முத்து, கடைசியில்,
“இவர் பரசு மாமாவின் மாப்பிள்ளையின் தாய் மாமா. இவர் மலேசியா சென்றதே இல்லை. இவருக்கு பாஸ்போர்ட் கூட இல்லை. இவர் சென்னையிலேயே பிறந்தவர்,” என்று முத்து உண்மையை உடைக்கிறார்.
இதைக் கேட்ட அண்ணாமலை, விஜயா அதிர்ச்சி அடைகிறார்கள். முத்துவுக்கும் மீனாவிற்கும் உண்மை தெரிந்துவிட்டது என்பதால், ரோகிணி அதிர்ச்சியில் உறைந்துவிடுவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
நாளை எபிசோடில் பிரவுன் மணி ரோகிணியிடம் சென்று “பொய் அதிக நாள் நிலைக்காது, உண்மை ஒருநாள் வெளியே வந்துவிடும்,” என்று சொல்லி விட்டு வெளியேறுகிறார்.
அதன் பிறகு, உண்மையை அறிந்த விஜயா, “என்னை இத்தனை நாள் ஏமாற்றிவிட்டாயா? இனி ஒரு நிமிடமும் வீட்டில் இருக்கக்கூடாது!” என்று கூறி, ரோகிணியை அடித்து வெளியே விரட்டுவதுடன் நாளைய எபிசோட் புரோமோ முடிகிறது.