அடுத்தடுத்து வீடுகளை விற்பனை செய்யும் பாலிவுட் நட்சத்திரங்கள்.. ரூ.3 கோடிக்கு வீட்டை விற்ற நடிகை..!

  பாலிவுட் நடிகை கஜோல் தனது மும்பையின் ஹிரானந்தானி கார்டன்ஸ், போவை பகுதியில் உள்ள பிரம்மாண்டமான 762 சதுர அடிக்கான அடுக்குமாடி அபார்ட்மெண்டை ரூ.3.1 கோடி என்ற விலைக்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய…

Kajol

 

பாலிவுட் நடிகை கஜோல் தனது மும்பையின் ஹிரானந்தானி கார்டன்ஸ், போவை பகுதியில் உள்ள பிரம்மாண்டமான 762 சதுர அடிக்கான அடுக்குமாடி அபார்ட்மெண்டை ரூ.3.1 கோடி என்ற விலைக்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய வீட்டை வ்ருஷாலி ரஜ்னீஷ் ரானே மற்றும் ரஜ்னீஷ் விஷ்வநாத் ரானே ஆகியோர் வாங்கியுள்ளனர் என தெரிகிறது..

மும்பையின் அட்லாண்டிஸ் கோ-ஆபரேட்டிவ் ஹவுசிங் சொசைட்டி லிமிடெட்-இன் 21வது மாடியில் அமைந்துள்ள கஜோலுக்கு சொந்தமானஅபார்ட்மெண்ட், இரண்டு ஸ்டாக் கார் பார்க்கிங் வசதிகளுடன் இருந்தது. இந்த வீட்டின் மதிப்பு ஒரு சதுர அடிக்கு ரூ.40,682 என மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கஜோல் தனக்கு சொந்தமான வீட்டை ரூ.3.1 கோடிக்கு விற்றாலும் அவர் இந்த மாதம் தொடக்கத்தில், கோரேகான் வெஸ்ட் பகுதியில் 4,365 சதுர அடியில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தை ரூ.28.78 கோடி மதிப்பில் வாங்கினார். இந்த வணிக வளாகம் பாரத் ரியால்டி வெஞ்சர்ஸ் பிவிடி. லிட். நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்திற்காக கஜோல் ரூ.1.72 கோடி முத்திரை வரியாக செலுத்தியுள்ளார். இந்த சொத்தின் ஒரு சதுர அடிக்கு ரூ.65,940 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இது ஐந்து கார் பார்க்கிங் வசதிகள் கொண்டுள்ளது.