இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகவும், உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவரான பாலிவுட் நடிகை ஆலியாபட் விளங்குகிறார். பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான மகேஷ்பட்-ன் மகளான ஆலியா பட் சினிமாவில் முதன் முதலில் 1999-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 2012-ல் வெளியான ஸ்டுடண்ட் ஆஃப் த இயர் படத்தில் முன்னணி நடிகையாக தடம் பதித்தார். தொடர்ந்து பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்து வரும் ஆலியா பட் தன்னை விட 10 வயது மூத்தவரான இந்தி நடிகர் ரன்வீர்கபூரை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும், பிலம்பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார் ஆலியாபட்.
லட்டுல உங்களுக்கு ஜோக் கேட்குதா…? கொதித்த பவன் கல்யாண்.. மன்னிப்பு கேட்ட கார்த்தி
இந்நிலையில் ஆலியாபட் தனக்கு ADS எனப்படும் Attention Deficit Disorder என்னும் அரியவகைக் குறைபாடு இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தக் குறைபாட்டினால் அவரால் எந்த ஒரு வேலையிலும் 45 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது. இதனால் அவர் வேலை செய்யும் போது கவனக்குறைவும், சோம்பலும், சில நேரங்களில் வேலைகளைத் தவிர்க்கும் செயல்களிலும் ஈடுபடுவதாக அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஆலியாபட்.
இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு விபரங்களைப் புரிந்து கொள்வது, வழிமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றில் சிரமம் ஏற்படும்.
கடந்த வருடம் நடிகை சமந்தாவும் தனக்கு மயோசிடிஸ் என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நோயால் தசை இயக்க நிலைகளில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.