ரஜினிகாந்த் திரைப்படங்களில் ஆங்கிலம் பேச சிரமப்படுபவராக காண்பிக்கப்படுவார். குரு சிஷ்யன் போன்ற அவரின் படங்களில் இங்லீஷ் தப்பு தப்பாக பேசி காமெடி செய்வார் ரஜினி.
இப்படியான ரஜினி, ஆங்கில படத்தில் நடித்திருப்பாரா என இக்கால தலைமுறையினர் பலருக்கு தெரியாத விசயம். அவரும் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் பெயர் ப்ளட் ஸ்டோன்.
இளையராஜாவும் ஜெர்ரி கிராண்ட் என்ற இசையமைப்பாளரும் இசையமைத்த இப்படத்தில் ரஜினி ஒரு டாக்ஸி டிரைவராக நடித்திருப்பார்.
ஒரு வைரக்கல் பற்றிய இந்திய அமெரிக்க வாழ் கதை இது. இப்படத்தை இயக்கி இருந்தவர் நிக்கோ மாஸ்ட்ரோகிஸ் என்ற ஆங்கில இயக்குனர்.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழர்கள். ஆனால் அமெரிக்க வாழ் தமிழர்கள். அதனால் இந்த கூட்டு முயற்சிகள் சாத்தியமானது. இப்படத்தை தயாரித்த அசோக் அமிர்தராஜ் என்பவர்தான் பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் படத்தை தயாரித்தவர் ஆவார்.