கடந்த 2 நாட்களாக ‘பிகில்’ பட தயாரிப்பாளர், பைனான்சியர் மற்றும் விஜய் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பதும் இந்த சோதனையில் ரூபாய் 77 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 300 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கணக்கில் வராத காசோலைகள் உள்பட பல கண்டுபிடிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் மற்றும் பணம் ‘பிகில்’ படத்தின் வசூல் என விஜய் ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டு டுவிட்டரில் பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் 300 கோடி ரூபாய் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதற்கு பட தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதுதான் வருமானவரித் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆனால் இதனை வைத்து ‘பிகில்’ 300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுவது தவறானது என்றும் கூறிவருகின்றனர் மேலும் இந்த 300 கோடி ரூபாய் விளக்கத் விளக்கமளிக்க வேண்டிவர்களில் விஜய்யும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது