பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் விக்ரமன் என்பதும், அவருக்கு தொடர்ச்சியாக பார்வையாளர்களின் ஆதரவு கிடைத்து வந்த நிலையில், அவர் தான் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அதிர்ச்சி அளிக்கும் வகையில், எதிர்பாராத விதமாக அசீம் டைட்டிலை பெற்றுக் கொண்டதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த நிலையில், விக்ரமன், ப்ரீத்தி கரிகாலன் என்பவரை சென்னையில் நேற்று திருமணம் செய்து கொண்டார். ப்ரீத்தி இயக்குனர் பார்த்திபனிடம் உதவியாளராக உள்ளார் என்பதுடன், ’கோடிட்ட இடங்களை நிரப்பவும்’, ’கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ உள்ளிட்ட பல படங்களில் அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமன் மற்றும் ப்ரீத்தி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், பலரும் விக்ரமன் மற்றும் ப்ரீத்தி தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
