ஊரே தீபாவளியை கொண்டாடி சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், பிக் பாஸ் வீடோ ஒப்பாரி வைக்கும் சத்தத்தால் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் வந்திருக்கும் போட்டியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் வெளியேற்ற வாய்ப்புகள் குறித்து ஒரு அனல் பறக்கும் அலசல் இதோ.
இந்த வாரத்தின் முக்கியப் பேசுபொருளாக இருப்பது ஆரோரா சின்க்ளர் தான். ஆதிரை, போட்டியாளர் கமருதீன் குறித்து வெளியே இருக்கும் சில தனிப்பட்ட தகவல்களை ஆரோராவிடம் கூறிவிட்டார். பல வருட பழக்கம் பாதியில் விட்டது போல, ஆரோரா தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்கிறார்.
கமருதீனும் புனிதமானவர் அல்ல; அவர் ரம்யா, சுபிக்ஷா பற்றி தரக்குறைவாக பேசியவர் தான். ஆனால், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பேசுவது தவறு. இந்த சம்பவம் நடந்த நிலையில், ஆரோரா சின்க்ளர் நாமினேஷனிலும் வந்துள்ளார். தீபாவளி நாளில் கண்ணீர் வடிக்கும் இவர், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.
கிளியை போல இருந்த ஆரோராவை குரங்கை போல ஆக்கியதாக கூறப்படும் ஆதிரையும் நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கிறார். ஆனால், லட்சக்கணக்கான ரூபாய் பி.ஆர். பணிகளுக்கு வெளியே செலவிட்டுள்ளதால், ஆதிரை இந்த வாரம் வெளியேறுவது கடினம் என்றே கருதப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக வீட்டில் சமையல் செய்வதை தவிர வேறு எந்த செயலிலும் ஈடுபடாமல் இருக்கிறார் கலையரசன். “நீ சமைத்தால், அதற்கான பாராட்டுகளை நீ தான் எடுத்துக்கொள்ள வேண்டும், உனக்காக பார்வதி ஏன் பேச வேண்டும்?” என்று நேற்று விஜய்சேதுபதியே கலையரசனை நேரடியாக கேள்வி கேட்டார். தன் நிலைக்காக பேசாத கலையரசன், இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ள பட்டியலில் இருக்கிறார்.
ரம்யா சிம்பதி கார்டு ப்ளே செய்கிறார் என்று விமர்சனம் இருந்தாலும், கமருதீனை எதிர்த்து தனது தொழில் குறித்துப் பேசியபோது, தன்னைக் காத்து நிற்கிறார். இதுவே பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டிய மிக முக்கியமான தகுதி. நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ, தன் கருத்துக்காக நிற்பவர்களுக்கு ஆடியன்ஸ் ஓட்டு போட வேண்டும் என்ற வகையில், ரம்யாவுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம்.
மருதீன் இவரை பற்றியும், இவரது குலத்தொழில் பற்றியும் மிக கேவலமாக பேசினார். “உன் பின்னணி அப்படி என்பதால் தான், நீ டர்ட்டி கேம் ஆடுகிறாய்” என்று பேசிய கமருதீனுக்குத் தக்க பதிலடி கொடுக்க, சுபிக்ஷா போன்றவர்கள் வீட்டில் இருப்பது அவசியம். நியாயத்தை பாதுகாக்க சுபிக்ஷாவுக்கு வாக்களிக்க வேண்டியது அவசியம்.
கானா வினோத் இந்த வாரம் வெளியேற வாய்ப்பில்லை. அவரது டைமிங் சென்ஸ் மற்றும் மெட்ராஸ் பாஷை பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். திவாகர் ஆர்மி கூட வினோத்துக்கு இந்த வாரம் மொத்தமாக ஓட்டு போட வாய்ப்புள்ளது.
“அழகானவர்கள் மூளை இல்லாதவர்கள்” என்ற பொதுவான கருத்தை முறியடித்து, அறிவும் அழகும் நிறைந்தவராக வியன்னா இருக்கிறார். தன்னை ஸ்ட்ரிப் டான்சர் என்று விமர்சித்த எஃப்.ஜே-வுக்கு தக்க பதிலடி கொடுத்தபோது, தன் நிலைப்பாட்டுக்காக நின்றார். வியன்னா ஒரு நம்பிக்கைக்குரிய போட்டியாளராக தெரிகிறார்; அவருக்கு வாக்களிக்கலாம்.
இந்த வாரம் துஷார் நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கியுள்ளார். இது ஆடியன்ஸுக்கு கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு. துஷாரை வெளியேற்றினால், அவருடன் நெருக்கமாக இருக்கும் ஆரோரா கண்ணீர்விட்டு, அடுத்த வாரமே தானாக வெளியேறுவார். பிக் பாஸ் சீசன் 6-ல் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டதும் நிவாசினி வெளியேறியது போல, இந்த ஜோடியை பிரிக்க துஷாருக்கு வாக்களித்து வெளியேற்றினால், அது சேனலின் வேலையை எளிதாக்கும்.
மொத்தத்தில், இந்த வாரம் வெளியேற்றம் ஆரோரா சின்க்ளராகவோ அல்லது அகோரி கலையரசனாகவோ இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
