பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டில், போட்டியாளர்களான FJ மற்றும் ஆதிரை ஆகியோரின் நடவடிக்கைகளும், அவர்களுக்கிடையேயான உரையாடல்களும் நாளுக்கு நாள் எல்லை மீறுவதாக பார்வையாளர்களால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது, போட்டியாளர்களுக்கு இடையேயான உறவுமுறைகள் குறித்து பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டுக்குள் FJ மற்றும் ஆதிரை இருவரும் பழகும் விதம், சாதாரண நட்பு அல்லது அக்கா-தம்பி உறவுக்கு அப்பால் சென்று விட்டதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. FJ-வும் ஆதிரையும் மிகவும் நெருக்கமாக படுத்துப் பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த நெருக்கமான உடல் மொழி, அண்ணன்-தங்கை உறவு என்று கூறுவோரை முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று விமர்சிப்பவர்கள், “உறவு என்றால் ஏன் எப்போதும் தொடுதல் இருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ஒரு உரையாடலின்போது, FJ “நான் அந்த விஷயத்தை பேசும் ‘மூடில்’ இல்லை” என்று கூற, அதற்கு ஆதிரை “அப்ப நீ என்ன ‘மூடில்’ இருக்க FJ? வீட்டுக்கு வா FJ” என்று கூறியது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைவிட ஆறு ஏழு வயது குறைந்த ஒரு இளைஞனை பார்த்து ஆதிரை இப்படி அத்துமீறி பேசுவது நியாயமற்றது என்றும், இதை ஆடியன்ஸ் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.
இந்த உரையாடலில், FJ நேரடியாக, “நீ ஏன் இந்த மாதிரி ‘அடல்ட் கன்டென்ட்டை’ என்கிட்ட மட்டும் பேசுற?” என்று ஆதிரையிடம் கேட்கிறான். அதற்கு ஆதிரை, “நான் உன்ட்ட மட்டுமில்ல, அரோரா, சுபிக்ஷா உள்ளிட்ட பெண்களிடமும் இப்படிப் பேசுவதாக” கூறுகிறார்.
ஆனால், FJ அதற்கு, “நீ பெண்களிடம் பேசுவது வேறு, ஆண்களான என்னிடம் மட்டும் இப்படிப் பேசுவது வேறு” என்று கேட்கிறான்.
இந்த வகையான 18+ உரையாடல்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நடப்பது அநாகரிகமானது என பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். சிலர், சீசன் 7-ல் பூர்ணிமா நிக்சனிடம் இத்தகைய சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசியதே இன்றைய ஆதிரையின் இத்தகைய செயல்களுக்கு வித்திட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆதிரை மற்றும் FJ-வின் இந்த நெருக்கமான உரையாடல்கள் காதல் உணர்வை ஒத்திருந்தாலும், ஆதிரை பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே தனக்கு ஒரு காதலன் இருப்பதாகவும், “நான் இங்கே இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் செய்தால் கண்டுகொள்ளாதே” என்று அவனிடம் சொல்லித்தான் வந்ததாகவும் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இது காதலும் இல்லை, அண்ணன்-தங்கை உறவும் இல்லை என்றால், இது வெறும் ‘கன்டென்ட்டுக்காக’ செய்யப்படும் கேவலமான செயல் என்று விமர்சகர்கள் சாடுகின்றனர்.
FJ, ஆதிரை ட்ராக் மட்டுமல்லாமல், துஷார் – அரோரா, அரோரா – வாட்டர்மெலன் ஸ்டார், அரோரா – கமருதீன் என்று வேறு சில உறவுகளும் எல்லை மீறி செயல்படுவதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர். துஷார், அரோராவுக்கு முத்தம் கொடுப்பது போல கண்ணாடிக்கு வெளியே உதடுகளை வைப்பதும், அரோரா அதை கண்ணாடியின் உள்ளே வைத்து பதிலளிப்பதும் போன்ற காட்சிகள், பார்வையாளர்களை மேலும் எரிச்சலடைய செய்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் தரம் வெகுவாக குறைந்துவிட்டதாகவும், இது போன்ற ‘கேவலமான கன்டென்ட்’ மற்றும் ‘மானங்கெட்ட செயல்களை’ பார்ப்பதற்கு வெட்கமாக இருப்பதாகவும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
