பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இனி வரும் ஒவ்வொரு நாளும் 8 போட்டியாளர்களுக்கு நெருக்கடியான ஒரு நிலையாகவே இருக்கும் என தெரிகிறது. மேலும் அவர்கள் உள்ளே இருப்பதால் மக்களின் ஆதரவு என்பதையும் நிச்சயம் தெரிந்து கொள்ள முடியாது. அப்படி ஒரு சூழலில் தான், இதற்கு முன் எலிமினேட் ஆன 8 பேர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர்.
அப்படி உள்ளே வருபவர்கள் வெளியே என்ன நடக்கிறது என்பதை பற்றி பேசக்கூடாது என பிக் பாஸ் சார்பில் எச்சரிக்கப்படும். அப்படி இருந்தும் அதை பொருட்படுத்தாமல் வெளியே யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை பற்றி போட்டியாளர்களிடமும் அனைவரும் பகிர்ந்து கொண்டனர். கொஞ்சம் பொறுத்து பொறுத்து பார்த்த பிக் பாஸ், ஒரு கட்டத்தில் தனது நிதானைத்தையும் இழந்து விட்டார்.
நான் சொல்லியும் மீறிட்டீங்க
அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட் ஆகி மீண்டும் விருந்தினர்களாக வந்த சிவகுமார், ரியா, வர்ஷினி, தர்ஷா குப்தா ஆகிய 5 பேரை அழைத்து பேசிய பிக் பாஸ், பகிரங்கமாக அனைவரையும் எச்சரித்திருந்தார். “வெளியே என்ன நடக்கிறது என்பதை உள்ளே சொல்லக்கூடாது என கூறியும் நீங்கள் அதை மீறி வருகிறீர்கள்.
இந்த போட்டியில் அனைவரும் நீங்கள் யார் என்பதை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு தானே இது. அப்போது அதில் தானே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் வெளியே என்ன நடக்கறது என்பதை உங்களுடைய புரிதலில் சொல்லும் போது போட்டியாளர்களும் 14 வாரங்கள் ஆடிய ஆட்டத்தை மறந்து விட்டு அதை உண்மை என நினைக்கிறார்கள்.
சாச்சனா, ஜோக் பண்றீங்களா
உங்களை தப்பு சொல்வதா, இல்லை அவர்களை தப்பு சொல்வதா என எனக்கே குழப்பமாக இருக்கிறது. திரும்பவும் இதை நீங்கள் செய்தால் வெளியே செல்ல தயாராக இருங்கள்” என கடுமையாகவும் கூறுகிறார். இதன் பின்னர் ஐந்து பேரும் மாறி மாறி தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
இப்படி ஒரு வாய்ப்பை மீண்டும் உள்ளே வந்தவர்கள் சரியாக பயன்படுத்த தவறிய சமயத்தில் தான் சாச்சனா சொன்ன ஒரு வார்த்தை பிக் பாஸை இன்னும் கடுப்பேற்றி இருந்தது. “இனி அப்படி பேசுவதை நாங்கள் தவிர்க்க முயற்சி செய்கிறோம் பிக் பாஸ்” என சாச்சனா தெரிவிக்கிறார்.
இதை கேட்டதும், “முயற்சி தான் செய்வீர்களா. என்ன ஜோக் செய்கிறீர்களா சாச்சனா?” என கடுப்பாக, அதை அறிந்து சுதாரித்து கொண்ட சாச்சனா, “முயற்சி இல்லை, நான் கண்டிப்பாக செய்கிறேன்” என்றும் தெரிவிக்கிறார். குழந்தை போல உள்ளே போட்டியாளராக இருந்த போதே சில விஷயங்களை சரியாக சாச்சனா செய்யாமல் போக, தற்போது பிக் பாஸிடமும் அப்படி பேசி அவர் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.