Bigg Boss Tamil Season 8 Day 9: அழுகையும் சண்டையும் ஆன பிக் பாஸ் வீடு… கலகம் செய்த தர்ஷா குப்தா!

Bigg Boss Tamil Season 8 Day 9 முழுவதும் சண்டை சச்சரவுகள் அழுகைகள் என்றே போய்க்கொண்டே இருக்கிறது. விஜய் சேதுபதி நீங்கள் Comfortable ஆக இருப்பதற்கு வரவில்லை போட்டி போட்டு விளையாடுறதுக்கு தான்…

Bigg Boss

Bigg Boss Tamil Season 8 Day 9 முழுவதும் சண்டை சச்சரவுகள் அழுகைகள் என்றே போய்க்கொண்டே இருக்கிறது. விஜய் சேதுபதி நீங்கள் Comfortable ஆக இருப்பதற்கு வரவில்லை போட்டி போட்டு விளையாடுறதுக்கு தான் வந்திருக்கிறீர்கள். நீங்கள் அமைதியாக ஆளாளுக்கு நான் தான் நல்லவன் என்று காட்டுவது போல் இருந்தால் ஆடியன்ஸ் எப்படி இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள்.

bigg boss

போட்டி போட்டு ஜெயிக்கிறதுக்கு தானே வந்து இருக்கீங்க அந்த வேலையை பாருங்க என்று சொல்லிவிட்டது தான் எல்லோரும் அதை எடுத்து வைத்துக்கொண்டு எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் சண்டை போட்டு கேமராவில் நாம் தெரியலாம் என்பது போல நடந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆண்களிலிருந்து பெண்கள் அணிக்கு தீபக் நேற்று அனுப்பப்பட்டார். அதேபோல் பெண்கள் அணியில் இருந்து தர்ஷா குப்தாவை ஆண்கள் அணிக்கு அனுப்பி வைத்தனர். இதை பெண்கள் அணியினர் பிளான் செய்துதான் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ர்ஷா குப்தா போகட்டும் அவ பேசியே அவங்களை எல்லாத்தையும் ஒரு வேலையும் செய்யவிடாமல் பண்ணிடுவா அப்படின்னு பெண்கள் அணியில் திட்டம் போட்டு அவரை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் போட்ட திட்டத்தில் வெற்றி அடைந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தர்ஷா போன உடனே ககத்தை ஆரம்பித்து விட்டார்.

ஆண்கள் அணியில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் எனக்கு நீங்க டாஸ்க் குடுங்க எனக்கு அது குடுங்க எனக்கு இது குடுங்க என்னை நீங்க கண்டுகொள்ள மாட்றீங்க ஒன்னும் செய்ய விட மாட்றீங்க அப்படின்னு ஒவ்வொரு விஷயத்திற்கும் பிரச்சினை பண்ணி கொண்டே இருக்கிறார் தர்ஷா.

அதே போல் கிராசரி ஷாப்பிங்கிலும் அவரை அனுப்புவதற்காக கேட்டார். ஆண்கள் அணி அனுப்பவில்லை. கிராரி டாஸ்கில்ண்கள் அணி படுதோல்வி அடைந்தது. குறிப்பிட்டத் தொகைக்கு மேலாக purchase செய்தனர். அந்த நேரத்தில் பிக் பாஸ் அறிவித்ததும் தர்ஷா குப்தா அனைவரும் முன்னிலையிலும் ஆண்களை மொத்தமாக திட்டுவது போல் திட்டி விட்டு பின்னாடி வந்து சிரித்தார்.

பின்னர் பெட் ரூமுக்குள் தர்ஷா வந்ததும் ஜெஃப்ரே நேற்று பயங்கரமாக பிடித்து தர்ஷாவை போட்டு வாங்கி விட்டார். நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எதுக்காக நீங்க ஆண்கள் அணிக்கு வந்தீங்க கோபமா திட்டுறீங்கன்னா உங்களுக்கு சிரிப்பு வருமா நீங்க சிரிச்சத நாங்க பார்த்தோம் கண்ணாடில அப்படின்னு நேற்று பயங்கரமாக ஜெபிரே எல்லா இடத்திலும் குரல் கொடுத்தார்.

bigg boss

ஆனால் எவ்வளவுதான் பேசினாலும் தர்ஷா விடவே இல்லை கிடைத்த இடத்தில் எல்லாம் சண்டையிட்டு கொண்டு ககத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார். அதற்கு அடுத்ததாக ஆண்கள் இடத்திற்கு பெண்கள் வரும் போது ஒவ்வொரு டாஸ்க்கும் கடினமாக கொடுக்க வேண்டும் என்று பேசி வைத்திருந்தார்கள்.

ஜாக்லீனுக்கும் ஒரு டாஸ்க்கை கொடுத்தார்கள். அதை ஒத்துக்கொள்ளாமல் ஜாக்லின் ஒரு பக்கம் அழ ஆரம்பித்துவிட்டார். அடுத்தது தர்ஷா அழ ஆரம்பித்துவிட்டார். இப்படி அழுகையும் சண்டை சச்சரவுமாகவே இன்றைய எபிசொட் முடிந்தது.