Bigg Boss Tamil Season 8 Day 8: தீவிர கலந்துரையாடலில் Housemates… இதற்கிடையில் கேப்டனாகவும் நாமினேட் ஆனவர்களும் யார்?

Bigg Boss Tamil சீசன் 8 Day 8 ஆன இன்று ஆரம்ப முதலே விஜய் சேதுபதி அவர்கள் கூறியதை வைத்து ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தனித்தனியாக கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரத்தில்…

Bigg Boss

Bigg Boss Tamil சீசன் 8 Day 8 ஆன இன்று ஆரம்ப முதலே விஜய் சேதுபதி அவர்கள் கூறியதை வைத்து ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தனித்தனியாக கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Bigg Boss

இந்த வாரத்தில் கேமை கொண்டு செல்வது எப்படி ஆண்கள் அணியிலிருந்து பெண்கள் அணிக்கு போவது யார் அங்கிருந்து யார் ஆண்கள் அணிக்கு வருவது தட்டுப்பாடு இல்லாமல் ஒரு வாரம் உணவு கிடைப்பதற்கு grocery எப்படி எடுப்பது போன்ற தீவிர கலந்துரையாடலில் இருக்கின்றார்கள்.

இந்த கலந்துரையாடலில் அவர்கள் சமையல் செய்வதற்கு மறந்து விட்டார்கள். பிக் பாஸ் அவர்களை கூப்பிட்டு வார்னிங் கொடுத்து டாஸ்கை ஆரம்பிக்க வேண்டும் சீக்கிரமாக உங்கள் அன்றாட பணியை செய்து முடியுங்கள் என்று கூறுகிறார்.[

அடுத்ததாக எல்லோரும் ஒருமனதாக முடிவு செய்து தீபக் பெண்கள் அணிக்கும் தர்ஷா குப்தாண்கள் அணிக்கும் இடம் மாறிக் கொள்கின்றனர். இந்த முறை தீவிரமாக விளையாட வேண்டும் யாரை நாமினேட் செய்ய வேண்டும் என்று முத்துக்குமார் பேசிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக தலைவருக்கான போட்டி நடந்தது. சற்று கடினமான டாஸ்காக இது இருந்தது. போட்டியில் வென்று இந்த வார கேப்டனாக சத்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்ததாக நாமினேசன் பிராசஸ் நடைபெற்றது. முத்துக்குமாரும் பவித்ராவும் நேரடி நாமினேஷன் செய்வதற்காக பிக் பாஸ் கூறினார். அவர்கள் இருவரும் தீபக்கையும் ஜாக்குலினையும் நேரடியாக நாமினேட் செய்தார்கள்.

அதற்கு அடுத்ததாக பிக் பாஸ் ஆண்கள் அனைவரையும் பெண்களை நாமினேட் செய்யும் படியும் பெண்கள் அனைவரும் ஆண்களை நாமினேட் செய்யும் படியும் கூறினார். அதன்படி இந்த வாரம் நாமினேஷனில் இருப்பவர்கள் முத்துக்குமார், ஜெப்ரி, ரஞ்சித், அர்னவ், தர்ஷா குப்தா, விஷால் ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள்.

Bigg Boss

அதுக்கு அடுத்ததாக மளிகை பொருட்கள் பர்ச்சேஸ் பண்ணுவதற்கான போட்டி நடைபெறுகிறது. அதில் ஒரு மழை கோட்டில் கம் தடவிக்கொண்டு கார்டன் ஏரியாவில் கீழே போடப்பட்டிருக்கும் காசுகளை உருண்டு உருண்டு யார் அதிகமாக எடுக்கிறார்கள் என்பது தான் போட்டி.

அது முடிந்தவுடன் மளிகை பொருட்கள் எடுக்கும் நடைபெற்றது. முதல் வாரம் எப்படி விளையாட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள் தற்போது தீவிரமாக தனித்தனியாக யோசித்து இந்த வாரம் விளையாட ஆரம்பித்து இருக்கிறார்கள்.