Bigg Boss Tamil Season 8 Day 7: இந்த மாதிரி ஒரு எலிமினேஷனை பார்த்ததில்லை… விஜய் சேதுபதிக்கு பதிலாக Twist வைத்த ரவீந்தர்!

Bigg Boss Tamil season 8 Day 7 நேற்று சண்டே எபிசோட் பயங்கரமாக இருந்தது. விஜய் சேதுபதி யாரெல்லாம் முதுகு பின்னாடி பேசுவார்களோ அவர்களையெல்லாம் நேருக்கு நேராக கேட்டு போட்டு கொடுத்து விட்டார்.…

bigg boss 8

Bigg Boss Tamil season 8 Day 7 நேற்று சண்டே எபிசோட் பயங்கரமாக இருந்தது. விஜய் சேதுபதி யாரெல்லாம் முதுகு பின்னாடி பேசுவார்களோ அவர்களையெல்லாம் நேருக்கு நேராக கேட்டு போட்டு கொடுத்து விட்டார். இதன் தாக்கம் இந்த வாரத்தில் தெரியும். கண்டிப்பாக ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொள்வார்கள்.

bigg boss 8

யார் strategy வைத்திருக்கிறார்கள் யார் முதுவுக்கு பின்னால் பேசி புறணி கிளப்பி விட்டு அடுத்தவர்களை வைத்து விளையாடுகிறார்கள் என்பது போன்ற பலபேரின் முகங்களை விஜய் சேதுபதி வெளியே கொண்டு வந்து விட்டார். சாச்சனா weak contestants யார் யார் என்று சொன்னதை ஓபனாக விஜய் சேதுபதி கேட்டுவிட்டார்.

இதனால் சுனிதா டென்ஷன் ஆகி அழ ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக யார் எலிமினேஷன் ஆவார்கள் என்று அதுவே ரொம்ப நேரம் போனது. எல்லோரும் எதிர்பார்த்தபடி நேற்று ரவிந்தர் எலிமினேட்டாகி இருக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் அவர் வெளியே வந்து செய்த சம்பவம் தான்.

நேற்றைய எபிசோடில் ரவீந்தர் செய்த சம்பவம்தான் highlight ஆக இருந்தது. விஜய் சேதுபதியே அதை ரசித்து என்ஜாய் பண்ணினார். இந்த மாதிரி ஒரு எலிமினேஷனை பார்த்ததே இல்லை என்பது போல் இருந்தது. ரவிந்தர் வெளியே வந்ததும் பார்வையாளர்களை அந்த அளவு சிரிக்க வைத்து விட்டார்.

விஜய் சேதுபதி நீங்க ரிவ்யூ பண்ணுங்க என் கண்ணு முன்னாடியே இங்கே பண்ணுங்க என்று கூறும் போது நான் என்னோட ஸ்டைல நான் வச்சு செய்றேன் சார் என்று கூறியதும் ஆடியன்ஸ் கைதட்டி விசில் அடித்தனர். அதேபோல் நடக்கவே மிகவும் சுவாரசியமாக இருந்தது.

bigg boss 8

ஆனால் அனைவரும் வாழ்த்திய பிறகு ரவீந்தர் ஒவ்வொருவருக்கும் கொடுத்த ரிவ்யூ நேருக்கு நேராக உண்மையாகவே இருந்தது. அவர் சொன்னபடி விளையாடினால் நன்றாக இருக்கும். அவர் அந்த அளவுக்கு நீங்க இந்த மாதிரி இருக்கீங்க இந்த மாதிரி விளையாடுங் என்று சொல்லிக் கொடுத்துவிட்டுதான் போயிருக்கிறார்.

ஆனால் பிக் பாஸ் இன்னும் கொஞ்ச நாட்கள் போன பிறகு மிகவும் முக்கியமான சமயத்தில் மீண்டும் ரவீந்தர் உள்ளே வருவார் என்று தான் தோன்றுகிறது. அது நடக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.