Bigg Boss Tamil Season 8 Day 55 வில் இறுதியாக பொம்மை டாஸ்க் வந்து விட்டது. கடைசி சுற்றில் சிவகுமாரும் ஜெஃபிரியும் இறந்தனர். இந்த இடத்தில் பிக் பாஸ் டுவிஸ்ட் வைத்துவிட்டார். அவர்கள் இருவருக்கு பதிலாக வேறு இருவர் விளையாட வேண்டும் என்று சொன்னார். அப்படி அவர்கள் இருவர் தேர்ந்தெடுத்தவர்கள் அருண் மற்றும் ராயன். இறுதியில் பொம்மை டாக்கில் வெற்றி பெற்றது ஜெஃப்ரி தான். இதன் மூலம் ஜெபிரி அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
அடுத்ததாக பெஸ்ட் பர்ஃபார்மராக சாச்சனாவும் ஜெப்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒர்ஸ்ட் performer ஆக மஞ்சரியும் ராணவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். அடுத்ததாக வீட்டில் சாப்பாடு செய்ய நேரம் ஆகிவிட்டதால் அருணும் ஜாக்குலினும் சேர்ந்து வீட்டில் அனைவருக்கும் பிரட் கொடுத்தனர். இந்த பிரட்டை டோஸ்ட் செய்து தரவில்லை என்று மஞ்சரி ஆரம்பித்த பிரச்சனை நேற்று முழுவதும் வந்த பிரச்சனைதான் ஓடிக்கொண்டே இருந்தது.
தேவையில்லாமல் மஞ்சரியால் பல சலசலப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் தீபக்கும் சத்தம் போட ஆரம்பித்து விட்டார். ஆனால் ஒன்று தெரிகிறது மஞ்சரி அப்பட்டமாக பொய் பேசிக் கொண்டே இருக்கிறார் என்பது தெரிகிறது. நான் கேப்டன் ஆகும் சரி தீபக்காகவும் சொல்லி நீங்க எதுமே தப்பு நடக்கல மஞ்சரி நீங்க தான் இப்படி பேசுறீங்க என்று கூறினார்.
அது மட்டுமில்லாமல் லிவிங் ஏரியாவில் அனைவரையும் கூப்பிட்டு இந்த இடத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று கூறி ஒவ்வொருத்தருடைய கருத்தை கேட்டார். அப்போது 18 பேருக்கு சமைக்கிறது சாதாரண விஷயம் இல்ல. அதனால கிச்சன்ல வேலை செய்யும் போது தொந்தரவு பண்ணாம அவங்களுக்கு இடம் கொடுங்க என்று அனைவரும் கூறினார்கள்.
தீபக் பயங்கரமாக பேசிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். யார் யார் என்ன செய்தார்கள் என்பதை பட்டு பட்டு என்று சொல்லிவிட்டார். கடைசியில் இதுதான் கிடைத்த சாக்கு என்று பூ வில் ஒன்றை கட் செய்துவிட்டார் மஞ்சரி. மஞ்சரியினால் பிக் பாஸ் வீட்டில் ஒரு பூகம்பம் ஏற்பட்டு விட்டது என்று சொல்லலாம்.