Bigg Boss Tamil Season 8 Day 53: தடாலடியாக நடந்த பொம்மை டாஸ்க்… Cringe செய்யும் தர்ஷிகா!

Bigg Boss Tamil Season 8 Day 53 இல் அதிரடியாக தொடங்கியது பொம்மை டாஸ்க். Housemates அனைவரும் வெறித்தனமாக விளையாடினார்கள். சௌந்தர்யாவுக்கு அடுத்ததாக தர்ஷிகா அவுட் செய்யப்பட்டார். அதற்கு பிறகு மழை பெய்து…

Bigg Boss

Bigg Boss Tamil Season 8 Day 53 இல் அதிரடியாக தொடங்கியது பொம்மை டாஸ்க். Housemates அனைவரும் வெறித்தனமாக விளையாடினார்கள். சௌந்தர்யாவுக்கு அடுத்ததாக தர்ஷிகா அவுட் செய்யப்பட்டார். அதற்கு பிறகு மழை பெய்து கொண்டிருந்ததால் டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. டாஸ்க் இல்லாத சமயத்தில் வீட்டுக்குள்ளே பல விஷயங்கள் நடந்தது.

bigg boss 20

சமீபகாலமாக பிக் பாஸில் மிகவும் கிரிஞ்சாக போய்க்கொண்டிருக்கும் விஷயம் தர்ஷிகா விஷால் பின்னால் சுற்றுவது தான். இருவரும் லவ் பண்ணுவது போல பேசிக்கொள்கின்றனர். இதில் அதிக ஈடுபாடு கொண்டு இருப்பது தர்ஷிகா தான். விஷால் ஏதோ விளையாட்டு தனமாக செய்வது போலிருக்கிறது.

இதைத்தான் பவித்ராவும் ஆனந்தியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். பவித்ரா ஏன் தர்ஷிகா இப்படி பண்றான்னு தெரியலை. வந்த போது இருந்த மாதிரி இப்போ இல்ல. இது இவளோட பியூச்சர பாதிக்கும்னு அவங்களுக்கு தெரியாதா அவங்க பண்றது எல்லாம் என்னால கண் கொண்டு பாக்க முடியல அவ்வளவு காண்டாகுது என்று பவித்ராவும் ஆனந்தியும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இது அவளுக்கு தெரியணும் ஏன்னா இது நம்ம பிரச்சனை இல்லையே என்று ஆனந்தி கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக மறுபடியும் பொம்மை டாஸ்க் ஆரம்பித்தது. இதில் தடாலடியாக அடித்துக் கொண்டு பிடித்துக் கொண்டு விளையாடினார்கள். இந்த தடவை அவுட் ஆனவர்கள் அன்சிதா முத்துக்குமார் ஆகியோர் அவுட் ஆகி இருக்கிறார்கள்.

bigg boss 21

விஷாலிடம் பொம்மையை பிடுங்க வேண்டும் என்று சட்டை செயின் எல்லாம் பிடித்து கிழித்து விட்டார்கள். ஏனென்றால் பிக் பாஸும் அதுபடி தான் கூறியிருந்தார். பொம்மை ஹவுஸ்குள் உங்களது விருப்பப்படாதவர்களின் பொம்மை வைக்காமல் இருப்பதற்கு நீங்கள் தடுக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கொடுத்தது பிக் பாஸ் தான். அதற்கு தகுந்தாற்போல் அவர்களும் அடிதடி என விழுந்து எந்திரித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.