புத்தாண்டு ராசி பலன் 2025 – மேஷ ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக கொட்டப்போகும் பணம்!

By TM Desk

Published:

2024ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டில் நல்ல வேலை கிடைக்குமா? திருமணம் நடைபெறுமா என பலருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். 2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி மேஷ ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னமாதிரியாக பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். அசுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனி 2025ஆம் ஆண்டு தொடங்கப்போவதால் எந்த விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

மேஷம்:

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டு பிறக்கும் போது மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி, குடும்ப குரு, விரைய ராகு, 6ஆம் இடத்தில் கேது என கிரகங்கள் பயணம் செய்வதால் பண வருமானம் அதிகமாகவே இருக்கும். லாப சனியால் வருமானம் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் உள்ள குரு வருமானத்தை பல மடங்காக உயர்த்துவார். விரைய ஸ்தான ராகுவினால் சுப விரையங்கள் அதிகரிக்கும். 6ஆம் வீட்டில் உள்ள கேதுவினால் நோய் பாதிப்புகள் நீங்கும்.

சனி பெயர்ச்சி

மார்ச் மாதத்திற்கு மேல் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி 2025 மார்ச் மாத இறுதியில் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ஏழரை சனி தொடங்குகிறது. சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் விரைய சனியாக பயணத்தை தொடங்கப்போவதால் பண விசயங்களில் கவனமாக இருக்கவேண்டும். அதிக கடன் வாங்கி தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யாதீர்கள் ஆபத்தாகி விடும்.

குரு பெயர்ச்சி

குரு பகவான் மே மாதம் 14ஆம் தேதியன்று மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 3ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆகும் குருவினால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுவதால் திருமணம் சுப காரியங்கள் கைகூடி வரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைத்த காரியம் கைகூடி வரும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் பல மடங்காக அதிகரிக்கும்.

குரு பார்வை பலன்

குரு பகவான் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி அதிசார பெயர்ச்சியாகி கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் சுக ஸ்தான குருவாக பயணம் செய்யப்போவதால் வீடு மனை வாங்கலாம். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். குரு பகவானின் பார்வையால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி

2025ஆம் ஆண்டு மே மாதத்தில் 12ஆம் வீட்டில் உள்ள ராகு உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து சேரும். பங்குச்சந்தை முதலீடுகளில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். 6ஆம் வீட்டில் உள்ள கேது 5ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால் பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியங்கள் நடைபெறும்.

மொத்தத்தில் 2025ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. ஆண்டு முழுவதும் பவுர்ணமி நாட்களில் குல தெய்வத்தை நினைத்து விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.

மேலும் ஜோதிட தகவல்களுக்கு தமிழ் மினிட்ஸ் இணைதளத்தை பின்தொடரவும்.