Bigg Boss Tamil Season 8 Day 41 இல் வீகென்ட் எபிசோட் வழக்கம் போல் ஆரம்பித்தது. ஆனால் இந்த வாரம் எபிசோடு பரபரப்பாக எதுவும் செல்லவில்லை. கடந்த வாரம் பள்ளிக்கூடம் டாஸ்க் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். விஜய் சேதுபதியும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வாரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று விஜய் சேதுபதி கூறினார். ஹவுஸ் மேட்ஸில் டீச்சராக இருந்தவர்களுக்கு மாணவர்கள் பிராங்க் தான் செய்தார்கள் என்பது தெரியவே இல்லை. அதனால் ஒவ்வொருவரின் கருத்தையும் விஜய் சேதுபதி கேட்டார். இது ரொம்ப போர் அடிப்பது போல் இருந்தது. நடந்ததையே திரும்பத் திரும்ப சொல்லுவது போல் இருந்தது.
அனைவரிடமும் கேட்டு முடித்துவிட்டு இறுதியாக தீபக்கிடம் என்ன நடந்தது என்று கூற சொன்னார் விஜய் சேதுபதி. இந்த நேரத்தில் தான் தீபக் இது பிக் பாஸ் கொடுத்த சீக்கிரட் டாஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்டாஃப்ஐ திக்கு முக்காட வைக்க வேண்டும் என்பதுதான் அந்த சீக்ரெட்டாஸ்க் என்று கூறினார்.
உடனே அங்கே டீச்சர் ஆக வேலை பார்த்தவர்களுக்கு முகத்தில் ஈயாடவில்லை. அட பாவிகளா இந்த டாஸ்க்காக இந்த மாதிரி தான் பண்ணிங்களா என்று பார்த்தனர். அதற்கு அடுத்ததாக ஒவ்வொருவரின் பள்ளி கால அனுபவங்களை கூற சொன்னார் விஜய் சேதுபதி. நீங்கள் திரும்ப அந்த வாழ்க்கைக்கு போனால் எந்த மாதிரி இருக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை கூறினார்கள். விஜய் சேதுபதியும் தான் பள்ளிக்காலத்தில் எப்படி இருந்தார் என்பதைப்பற்றி விவரித்தார். அடுத்ததாக ஆடியன்ஸ் ரெண்டு பேருக்கு கேள்வி கேட்டனர். அதில் ஒருவர் அனைவரும் பள்ளிக்கூடம் டாஸ்க் செய்யும்போது பர்சனல் அட்டாக் செய்வது போல் இருந்தது. தங்களது கதாபாத்திரத்தை விட்டு வெளியே வந்து ஈகோவினால் வார்த்தைகளை விட்ட மாதிரி தெரிந்தது என்று கூறினார்கள்.
அதை கேட்கிறேன் என்று விஜய் சேதுபதி கூறினார். இன்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடு எந்த மாதிரி இருக்கும் பர்சனல் அட்டாக் பண்ணியாதை பற்றி பேசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.