Bigg Boss Tamil Season 8 Day 4: ஆண்கள் செய்த ஒரே ஒரு Prank மொத்த வீடும் பத்தி எரியுது!

By Meena

Published:

Bigg Boss Tamil Season 8 நான்காவது நாள் நேற்று ஆரம்பம் என்னமோ நன்றாக தான் போனது. ஆனால் போகப்போக வீடு பற்றி எரிய ஆரம்பித்தது. அதற்கு காரணம் ஆண்கள் அணியில் இருக்கும் ரவீந்தர் மற்றும் ரஞ்சித். தாங்கள் எலிமினேஷனில் இருப்பதால் பர்பாமன்ஸ் செய்ய விரும்பியது விபரீதமாக ஆகிவிட்டது.

எப்போதும் போன சீசன்களில் முதல் வாரம் டல்லாக போவது போல் இல்லாமல் இந்த சீசனில் முதல் வாரமே விறுவிறுப்பான டாஸ்க்களை பிக் பாஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அதன்படி நேற்று வீட்டு பணிகளை யார் செய்ய வேண்டும் ஆண்களா பெண்களா என்பது போல் டாஸ்க் வைத்து நடத்தினார்.

bbb1

அது பார்ப்பதற்கு விறுவிறுப்பாகவே இருந்தது. ஆ்ண்கள் நன்றாக பெர்ஃபார்ம் செய்து போட்டியில் வெற்றிக்கனியை தட்டி சென்று விட்டனர். பெண்கள் வீட்டு பணி செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்துவிட்டார். அடுத்ததாக ரவிந்தரும் ரஞ்சித்தும் நாம ரெண்டு பேரும் சண்டை போட்டு பிராங்க் பண்ணுவோம்.

பவித்ராவையும் விஷாலும் சண்டை ஆரம்பிப்பது போல் ஆரம்பிக்கட்டும் என்று பிளான் செய்கின்றனர். அதேபோல பிளானை எக்ஸிக்யூட் பண்ணுகிறார்கள். அருண் எல்லாம் கீழே விழுந்து கையில் அடி வாங்கி எல்லாரும் பர்பாமென்ஸ் செய்தார்கள். ரவீந்திரநாத் ரஞ்சித்தும் பயங்கர ஆக்டிங்.

ரஞ்சித் ரவீந்தரை அடிக்கிறதுக்கு பாய்வது போல் எல்லாம் செய்துவிட்டார். இதை பார்த்த பெண்கள் அணியினர் தர்ஷா ஜாக்குலின் தர்ஷிகா போன்றோர் கதற ஆரம்பித்து விட்டனர் இருவரையும் சமாதானப்படுத்துவதற்கு. ஆனால் இறுதியில் பிராங்க் என்று தெரிந்த பின்பு ஜாக்லின் மிகவும் அப்செட் ஆகி அழ ஆரம்பித்து விட்டார்.

bbb2

சமாதானப்படுத்த போன ஜெப்ரிவிடம் ஜாக்குலின் எங்களை பார்த்தா என்ன முட்டாள் மாதிரி தெரியுதா எவ்வளவு கதறி எவ்வளவு சீரியஸா இரண்டு பேரையும் சமாதானப்படுத்துனோம் இதெல்லாம் ஒரு பிராங்க் இப்படி பண்ணனுமா எங்களை பார்த்தால் என்ன முட்டாள் மாதிரி தெரியுதான்னு கோபப்பட ஆரம்பித்து விட்டார்.

இந்த விளையாட்டாக ஆரம்பித்த சண்டையில் பெண்கள் அணியில் டென்ஷன் ஆகிவிட்டது. ஜாக்குலின் இறுதியில் பவித்ராவிடம் வந்து முடித்து விட்டார். உங்களை நம்பி ஆண்கள் வீட்டுக்கு அனுப்பினால் நீங்க அவங்களுக்கு தானே சப்போர்ட் பண்றீங்க ஏன் பிராங்க்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்ல கூடாதா என் லூசு மாதிரி பண்றீங்க மாதிரி வார்த்தைகள் எல்லாம் விட்டார்.

பவித்ரா கடும் டென்ஷனாகி அவர் ஒரு பக்கம் அழுக ஆரம்பித்து. வீடே பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. நடுவில் கோல் போட்டா தான் உண்டு என்று தர்ஷா வேறு இடையில் இதற்கு தான் நான் அங்கே போறேன்னு சொன்னேன் என்னை யாருமே நம்பி அனுப்பலனு அவர் ஒரு பக்கம் கோல் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படி விளையாட்டாக ஆரம்பித்தது இந்த அளவுக்கு போகும் என்று ரவீந்தரும் ரஞ்சித்தும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அடுத்ததாக ஆண்களா பெண்களா என்ற விவாத போட்டியை பிக் பாஸ் அறிவித்திருந்தார். இது உண்மையிலே நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்று இந்த டாஸ்க்கில் பேசிய முத்துக்குமார், விஷால் ,ஆர் ஜே ஆனந்தி, ரவீந்தர் நன்றாக தங்களது வாதத்தை எடுத்து வைத்தனர். விஷால் காமெடியாக ஆண்கள் எப்படி நம்பிக்கை கூறியவர்கள் என்று கூறினார். முத்துக்குமாரின் பேச்சு அற்புதமாக இருந்தது. உணவு பூர்வமாக நம்பிக்கையை தரக்கூடியவர்கள் பெண்கள்தான் என்ற கருத்தை ஆழமாக எடுத்து வைத்தார்.

பெண்கள் அணிக்காக அவர் பேசியது பாராட்டப்பட்டது. இன்று நடந்த ப்ராங்கினால் ஆண்கள் அணியில் சற்று சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. நேற்று தான் அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று பேசப்பட்ட நிலையில் இன்று நிலைமை மாறி இருக்கிறது.