Bigg Boss Tamil Season 8 Day 29: Wildcard போட்டியாளர்களால் நாமினேஷனில் ஏற்பட்ட குழப்பம்… தீராத கோடு தாண்டும் பிரச்சனை!

By Meena

Published:

Bigg Boss Tamil Season 8 Day 29 இல் Wildcard கண்டஸ்டன்ஸ் வந்து ஆளாளுக்கு அவர்கள் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். வெளியே பார்த்ததை வைத்து Hint கொடுப்பது போல ஒவ்வொரு இடமும் நீங்கள் செய்வது தவறு இப்படி பண்ணியிருக்கக்கூடாது என்று பேசுகின்றனர்.

bigg boss 72

சாச்சனாவிடம் நீங்கள் வீகன் சொல்லிவிட்டு ஏன் சிக்கன் மட்டன் எல்லாம் வெளுத்துக்கட்டுனீர்கள் எப்படி அது முடிந்தது நீங்க சாப்பிடுங்க அதை எதுவும் குறை சொல்லல ஆனா நீங்க வீகன் என்ற வார்த்தை உபயோகப்படுத்தி இருக்க கூடாது நீங்க பேசுறது ஒன்னா இருக்கு ஆனா செய்வது வேற மாதிரி இருக்கு என்று கரெக்டாக சாச்சனாவை பற்றி பேசி இருந்தார் ராயன்.

அடுத்ததாக இந்த வாரம் பிக் பாஸ் ஓபன் நாமினேஷன் வைத்திருந்தார். பெண்கள் அணி ஆண்களையும் ஆண்கள் அணி பெண்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும். Wildcard கண்டஸ்டன்ட்ஸ் வெளியே இருந்து வந்து பல விஷயங்கள் சொன்னதால் Housemates சற்று குழப்பம் அடைந்து இருந்தனர். இந்த ஒரு தடவை நாமினேஷன் சற்று குழப்பமான முறையில் சென்ற மாதிரி தான் இருந்தது.

அதன்படி ஜாக்குலின், பவித்ரா, ஆனந்தி, விஷால், அருண், ரஞ்சித், சுனிதா, ன்சிதா, சாச்சனா நாமினேஷனில் வந்துள்ளனர். ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் முழுவதுமாக கோடு தாண்டும் பிரச்சனை தான் சென்று கொண்டே இருந்தது.

எப்படி பெண்கள் அணி கிச்சனுக்கு வரும்போது ஆண்கள் டாஸ்க் கொடுக்கிறார்களோ அதே போல பெண்கள் இருக்கும் இடத்திற்கு ஆண்கள் வரவேண்டும் ஸ்டோருக்கோ கன்பர்சன் ரூமுக்கு வரவேண்டும் என்றால் அவர்களும் டாஸ்க் செய்து விட்டதான் வரவேண்டும் இனிமேல் நாங்கள் அப்படித்தான் கொடுப்போம் என்ற பிரச்சனைதான் முழுவதுமாக ஓடிக்கொண்டே இருந்தது.

bigg boss 73

நாங்கள் இந்த டாஸ்க் கொடுப்போம் 30 செகண்ட் டாஸ்க் குடும்பம் அதற்குள் போயிட்டு வர வேண்டும் என்பது போல பெண்கள் டிமாண்ட் வைத்தனர். ஆனால் ஆண்கள் இதற்கு ஒத்துவரவே இல்லை. எபிசோடு முழுவதும் இந்த சண்டைதான் சச்சரவு தான் போய்க்கொண்டே இருந்தது. ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தையும் முன்வைத்தனர்.

Wildcard போட்டியாளர்கள் வந்தவுடன் சௌந்தர்யா ஒரு பீக்குக்கு போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பர்ஃபார்மன்ஸில் அடித்து தூக்குகிறார். இந்த சீசனில் கவனிக்கக்கூடிய ஒரு நபராக சௌந்தர்யா இருக்கிறார் நிச்சயம் அவர் பைனல்ஸ்க்கு வருவார் என்பது இப்போதிலே அவருடைய performance-ல் இருந்து தெரிகிறது. கோடு தாண்டும் பிரச்சினை அடுத்த லெவலுக்கு செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.