Bigg Boss Tamil Season 8 Day 13: விஸ்வரூபம் எடுத்த உணவு பிரச்சனை… ஆனாலும் விஜய் சேதுபதி இப்படி சொல்லியிருக்கக்கூடாது!

Bigg Boss Tamil Season 8 Day 13 இல் Weekend எபிசோட் நடைபெற்றது. விஜய் சேதுபதி வழக்கம் போல எல்லோரையும் கேட்க வேண்டிய கேள்விகளை கரெக்டாக கேட்டுவிட்டு வச்சு செய்து விட்டார். வெள்ளிக்கிழமை…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 13 ல் Weekend எபிசோட் நடைபெற்றது. விஜய் சேதுபதி வழக்கம் போல எல்லோரையும் கேட்க வேண்டிய கேள்விகளை கரெக்டாக கேட்டுவிட்டு வச்சு செய்து விட்டார். வெள்ளிக்கிழமை எபிசோடில் காட்டப்பட்டபோது அன்சிதா சாச்சனாவுக்கு இடையே சாப்பாடு விஷயத்தில் பயங்கர பிரச்சனை ஏற்பட்டது. அதையும் விஜய் சேதுபதி எடுத்து பேசினார்.

bigg boss

நேற்று Weekend எபிசோட் முழுவதும் முக்கால்வாசி இந்த சாப்பாடு பிரச்சினை பற்றிய போய்விட்டது. அது சற்று போர் அடிப்பது போல் இருந்தது. என்ன தான் விஜய் சேதுபதி நன்றாக ஹவுஸ் மேட்சை கேட்டாலுமே ரொம்ப நேரம் இந்த சாப்பாடு பிரச்சனையே பேசிக்கொண்டு இருந்தால் பார்வையாளர்களுக்கு போர் அடித்தது போல் தான் இருந்தது. அனைவரிடமும் இந்த சாப்பாடு பிரச்னையை பற்றி கலந்து உரையாடினார் விஜய் சேதுபதி.

அடுத்ததாக ஆண்கள் கெத்தா பெண்கள் கெத்தா மெமரி கேமில் முத்துக்குமார் 15 பொருட்களும் கரெக்டாக சொன்னதை விஜய் சேதுபதி பாராட்டினார். அடுத்ததாக பவித்ரா கேப்டன்சி டாஸ்கில் விடாப்பிடியாக விளையாடிதையும் பாராட்டினார். தீபக் காலில் அடிபட்ட போதும் தனது அணிக்காக சுயநலம் இல்லாமல் விளையாடிதை நேற்று எடுத்து பேசினார் விஜய் சேதுபதி. இது போல ஒரு சில பேருக்கு பாராட்டு கிடைத்தது.

ஆனாலும் நேற்று இந்த வாரம் பல விஷயங்கள் நடந்தது. அதைப்பற்றி பேசுவார் என்று பார்த்தால் சாப்பாடு விஷயமே பாதி எபிசோடுக்கு மேல் போய்விட்டது. ஜெஃப்ரியை ஹவுஸ்மேட்ஸ் சிரித்து அவரை மனமுடைந்து அழ வைத்ததைப் பற்றி விஜய் சேதுபதி கொஞ்சம் அதிகமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் லேசாக தான் கேட்டார். ஜெப்ரியிடம் நீ சொன்ன பாயிண்ட் கரெக்ட். ஆனால் எதுக்குமே மனமடைந்து அழக்கூடாது தைரியமா நிக்கணும் அப்படின்னு ஒரு பாயிண்ட் மட்டும் சொல்லிட்டு முடித்து விட்டார்.

அடுத்ததாக டாஸ்க்களை பற்றி கேட்டுக் கொண்டிருந்த விஜய் சேதுபதி அனைவரும் ஏன் இப்படி சுற்றி வளைத்து பேசுகிறீர்கள் எதற்காக பேசுகிறீர்கள் நீங்கள் பேச வந்ததை நேரடியா சொல்லுங்க வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசுங்க சுத்தி விளக்காதீங்க பேசக்கூடிய கருத்தை சொல்றதுக்கு ஏன் இவ்ளோ பயப்படுறீங்க அப்படின்னு எடுத்து சொல்லி இருந்தார்.

bigg boss

தர்ஷா குப்தாவையும் நன்றாகவே கேள்வி கேட்டார். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊத்துறது போல ஏற்கனவே சாச்சனாவும் பிரச்சனை நடக்குது இதுல நீங்க வேற வேலை பண்ணீங்களா அப்படின்னு அவரையும் நன்றாக வைத்து செய்தார் விஜய் சேதுபதி. இனி நாளை எபிசோடில் மீதி வாரத்தில் மீதி நடந்த பிரச்சினைகளை கலந்து உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.