Bigg Boss Tamil Season 8 Day 101 இல் பணப்பெட்டி டாஸ்க் அடுத்த கட்டமாக நடைபெற்றது. அடுத்ததாக ரயான் பணப்பெட்டியை எடுக்க செல்வதாக கூறினார். அதன்படி இரண்டு லட்ச ரூபாய் பணம் வெளியே வைக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் சென்று ரயான் எடுத்துவிட்டு வீட்டுக்குள்ளே வந்து விட்டார்.
அதற்கு அடுத்ததாக ஹவுஸ் மேட்ஸ் டாப் 6 போட்டியாளர்களிடம் உங்கள் எதிர் போட்டியாளர்களிடம் உள்ள பிடித்த விஷயங்கள் முரண்பாடான விஷயங்கள் என்னென்ன என்பதை சொல்ல சொன்னார்கள். டாப் 6 போட்டியாளர்களும் இந்த சுவாரஸ்யமான மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டனர்.
முத்துக்குமரனின் தெளிவான பேச்சு மற்றும் சிந்தனை, பவித்ராவின் பொறுமை எதையும் நிதானமாக கையாளும் விதம், ஜாக்குலினின் தைரியம், சௌந்தர்யா க்யூட்னெஸ், ரியான் டாஸ்க் விளையாடும் விதம், விஷால் ஜாலியாக எதையும் எடுத்துச் செல்லும் விதம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறினார்கள்.
அதற்கு பிறகு வீட்டிற்குள்ளே மாகாபா வந்தார். மாகாபா வந்து டாப் 6 போட்டியாளர்களிடம் வெளியே மக்கள் கேட்ட கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் அதற்கு தகுந்தார் போல் பதில் கூறினார்கள். இந்த Session பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. வீட்டில் உள்ள அனைவரும் இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை எல்லாவற்றையும் நன்றாக என்ஜாய் செய்ய வேண்டும் என்று மகிழ்ச்சியோடு இருந்தார்கள்.
இது தவிர அடுத்த போட்டிகளில் கலந்துகொள்ள பவித்ரா மட்டும் சௌந்தர்யா வேகமாக ஓடி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். முத்துக்குமரன் அவர்களுக்கு அட்வைஸ் கூறிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்க்கும் போது போட்டியில் எவ்வளவு முனைப்போடு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அடுத்தது என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.